5 வருஷமா எங்க போனீங்க அன்புமணி! கேள்வி கேட்ட அதிமுக தொண்டரின் வாயில் குத்திய செம்மலை
சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் சரமாரியாக செம்மலை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.

அன்றைய தினமே 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைந்த ஓரணியாக போட்டியிடுகின்றன. இதேபோல் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஓராணியாக போட்டியிடுகின்றன. அமமுக, கமலின் மநீம, சீமானின் நாம் தமிழர் உள்ளிட்டவை தனியாக போட்டியிடுகின்றன.
தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்பமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் இடையே அதிமுக தொண்டர் ஒருவர், அன்புமணி ராமதாஸை பார்த்து 5 வருடங்களாக எங்கே போனீர்கள் என கேட்டார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் சரமாரியாக தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு! ஊழல் ஆதாரங்களை மறைக்க சதி? அன்புமணி கேள்வி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications