தமிழ்நாட்டை பிரித்து சேலம் தலைநகரமாம்.. ராமலிங்கம் வீசிய வெடி! பிரித்தாளுகிறதா பாஜக? பரபர விவாதம்
சேலம்: தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால், ஒரு மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி வீதம், ரூ.45 ஆயிரம் கோடி நிதியை நாங்கள் பெற்று தருவோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இது சோஷியல் மீடியாவில் பல்வேறு சலசலப்புகளை கிளப்பி விட்டுள்ளது.
சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "தமிழகம் இப்போது போதை பொருட்களின் கிடங்காக மாறியிருக்கிறது.. இதையெல்லாம் மறைப்பதற்காக அதிகார பலம், அரசியல் பலம், மீடியா பலத்தை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள்.

60 வருடங்களுக்கு பிறகு 3வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றிருக்கிறார்.. 48 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது உலக நாடுகள் எங்களை பார்க்கும் அளவிற்கு இந்தியாவின் நிதிநிலை அறிக்கை உள்ளது.
பிரச்சாரம்: இந்த நிதி நிலை அறிக்கையின் மூலம் இந்தியா ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் 2 வருடங்களில் வளர்ச்சி பெறும்... பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது.
ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் பேச வழியின்றி "தமிழ்நாடு" என்று பெயரை சொல்லவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்... கடந்த 2 ஆண்டுகள் "தமிழ்நாடு" பெயர் சொல்லப்பட்டதே.. அப்போது ஏன் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை?
புறக்கணிப்பு: நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் 3-வது இடம் பெற்றது. அதற்காக நாங்கள் தமிழகத்தைப் புறக்கணிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் நாள்தோறும் கொலை கொள்ளை என்று குற்றச் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. மேலும், கூலிப்படை தலைவர்களும் அதிகரித்துள்ளனர். பணத்திற்காக கொலை செய்யும் நபர்கள் அதிகளவில் தமிழகத்தில் உருவாகியுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு நிதி அறிவிப்பு வழங்கவில்லை என்று கூறும் தமிழக அரசு ஏற்கெனவே இரண்டு முறை நிதி வழங்கியதற்கான கணக்குகளை வழங்க தயாராக உள்ளதா? கணக்கு கேட்பார்கள் என்று பயந்துதான் தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லாமல் ஒவ்வொரு முறையும் தவிர்த்து வருகிறார்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒருமுறைகூட கலந்துகொள்ளவில்லை. அதில் பங்கேற்று, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை விளக்கி, நிதி ஒதுக்கீடு கேட்டால்தானே, தமிழகம் பயன்பெற முடியும்?
அமராவதியை ஆந்திர தலைநகராக சிறப்பு நிதி ஒதுக்கியது போல ஏன் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.. ஆந்திரவை இரண்டாக பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, 20 ஆயிரம் கோடி ஆந்திராவிற்கு தலைநகர் உருவாக்குவதற்கு கட்டமைப்பு பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சிறப்பு நிதி: அதுபோலவே தேர்தல் அறிக்கையிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் தலைநகர் அமைப்பதற்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். அதுமட்டுமல்லாமல் யார் ஆட்சிக்கு வந்தாலும் தலைநகர் உருவாக்குவதற்கு சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது தலைநகர் உருவாக்குவதற்கு முடிவு எடுக்கவில்லை.. ஆனால் சந்திரபாபு நாயுடு அமராவதி தான் தலைநகரம் என்று விரிவாக திட்ட அறிக்கை கொடுத்தது நாள் சிறப்பு நீதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே, தமிழ்நாட்டிற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்குவதற்கு நாங்கள் தயார்.. ஆனால், சேலத்தை தலைநகராக கொண்டு இன்னொரு மாநிலத்தை ஸ்டாலின் உருவாக்க தயாரா? முதல்ல சேலத்தை தலைநகராக கொண்டு உருவாக்கட்டும்.. அதுக்கு தேவை இருக்கு.. 234 தொகுதிகளை வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என அவசியமில்லை.
இன்னொரு மாநிலம்: 134 தொகுதிகளை கொண்டு ஒரு மாநிலமாகவும், 100 தொகுதிகளை கொண்டு இன்னொரு மாநிலமாகவும் இருக்கட்டும்.. ஆனால், இவருக்கு ஒரு மகன்தான் இருக்காரு.. இன்னொரு முதலமைச்சராக எப்படி ஆக்குவது ? யார்கிட்ட இன்னொரு முதலமைச்சர் பதவியை தருவது? என்று ஸ்டாலின் யோசிக்கலாம்..
ஆனால், சேலத்தை தலைநகராக கொண்டு, தமிழகத்தை இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். அப்படி பிரித்தால் சேலத்திற்கு 20,000 கோடி மத்திய அரசிடம் இருந்து வாங்கி தருவதற்கு தமிழக பாஜக தயார்.. இது மக்களின் கோரிக்கையும்கூட..
தலைநகரம்: தமிழக அரசு எந்தெந்த துறைக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தியதெல்லாம், இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களை மறைப்பதற்காகத்தான்.. தமிழகத்துக்கு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி கேட்கப்பட்டது? மத்திய பட்ஜெட்டில் எவ்வளவு கொடுக்கப்பட்டது? எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்றார்.
சலசலப்பு: மூத்த தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் இந்த பேச்சானது, பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டு வருகிறது.. "அதென்ன நாங்க தாறோம்.. எங்களுக்கு நிதி ஒதுக்குவது உங்க அப்பன் வீட்டு பணமா? தமிழ்நாடு தரும் நிதியை மறந்துவிடக்கூடாது.. தென்மாநில பிரதமர் வேண்டும் என்பதற்காகத்தான், பட்ஜெட்டில் வேண்டுமென்றே நிதியை ஒதுக்கவில்லையா?
தமிழ்நாட்டை 3 ஆக பிரிப்பதைவிட, இந்தியாவிலிருந்ததே தமிழ்நாட்டையே பிரித்து தந்துட்டீங்கன்னா எங்களக்கு ரொம்ப உதவியா இருக்கும்.. அப்படியே பிரித்தாலும், தமிழ்நாட்டை தமிழன்தான் இங்கு ஆள விடுவோம்.. இப்படி பிரித்தாளும் பா
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக












Click it and Unblock the Notifications