சேலம் ஸ்மார்ட் சிட்டி பணிகள்.. ஆய்வுக்கு களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்.. விவசாயிகளுடனும் சந்திப்பு!
சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சேலம்: கள ஆய்வு மேற்கொள்வதற்காக சேலம் வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கினார். தற்போது இரண்டாம் கட்டமாக வடக்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி வருகிறார்.

சேலத்தில் ஆய்வு
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் இன்று வந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, சேலம் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென ஓமலூர் - மேட்டூர் பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வட்டாட்சியர் அலுவலகம்
முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்புவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். வருகைப் பதிவேட்டினை பார்வையிட்ட முதலமைச்சர் அதிகாரிகள் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும், பட்டா மாறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் ஓமலூர் தாலுகாவில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளன, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஓமலூர் வட்டாட்சியர் வல்லமுனியப்பனிடம் கேட்டறிந்தார்.

மக்களை சந்தித்த முதல்வர்
தொடர்ந்து வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எப்போது மனு வழங்கப்பட்டது, உடனடியாக தீர்வு காணப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளும் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக சேலம் சென்ற அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறையினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications