சேலம் "மைதிலி" அக்கப்போரு.. மளிகை கடைக்குள்ளேயே.. போலீசுக்கு ஓடிய ராமசாமி.. பாவமே பார்க்க கூடாது போல

Subscribe to Oneindia Tamil

சேலம்: சங்ககிரி மைதிலி என்றால் சுற்றுவட்டாரத்தில் படுஃபேமஸாம்.. யாரிந்த மைதிலி? இவர் ஏன் இப்போது திடீர்னு லைம்லைட்டிற்கு வந்திருக்கிறார்?

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி.. 87 வயதாகிறது.. இவர் வீட்டிலேயே மளிகை கடையை நடத்தி வருகிறார்.

Do you know who is Salem Mythili and why did Sangagiri Ramasamy complaint against young woman

நேர்த்திக்கடன்: கடந்த வருடம் ஜூன் 3ம்தேதி, காலை 11.45 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்த மளிகை கடைக்கு வந்திருக்கிறார்.. வடுகப்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும்.. ஒரு சிப்பம் அரிசி விலைக்கு வேண்டும் என்று கேட்டு, அதற்குரிய காசையும் மளிகைக்கடைக்காரர் ராமசாமியிடம் தந்துள்ளார் பெண்..

பிறகு, வெயில் அதிகமாக இருக்கிறது, கொஞ்ச நேரம் இங்கேயே நிற்கிறேன் என்று சொல்லிவிட்டு, மளிகை கடையிலேயே நின்றுள்ளார் அந்த பெண்...

கோயில்நடை: சிறிதுநேரம் கழித்து, "12 மணிக்கு நடை சாத்திவிடுவார்கள் என்பதால்தான் வேகமாக வந்தேன்.. ஆனால், 11.45 மணிக்கே கோயில் பூட்டி விட்டார்கள்.. பூசாரியின் போன் நம்பர் இருந்தால் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்..

உடனே ராமசாமி, தன்னிடம் பூசாமி நம்பர் இல்லை, ஆனால், வெளியில் யாரிடமாவது கேட்டு வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.. அடுத்த 10 நிமிடத்துக்குள் கோயில் பூசாரியின் போன் நம்பரையும் தேடிக்கொண்டுவந்து தந்தார்.

ராமசாமி: இந்த 10 நிமிட கேப்பில்தான், வேலையை காட்டியுள்ளார் அந்த பெண்.. வீட்டுக்குள் சென்று, பீரோவை திறந்து 9 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் என மொத்தத்தையும் திருடிக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்.. சிறிது நேரம் கழித்து சந்தேகம் அடைந்த ராமசாமி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நகை, பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை தேடியலைந்தார் ராமசாமி.. எங்குமே கிடைக்கவில்லை.

சற்று தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த டூ வீலரில் ஏறி, அந்த பெண் தப்பித்து செல்வது, அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதற்கு பிறகு, சங்ககிரி போலீசில் புகார் தரவும், விசாரணை துரிதமாக ஆரம்பமானது.

கிருஷ்ணகிரி: மைதிலிதான் இந்த காரியத்தை செய்தது என்பதும் உறுதியானது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை அருந்ததியர் காலனியை சேர்ந்தவராம் இந்த மைதிலி.. 40 வயதாகிறது.. இவருக்கு திருடுவது, கொள்ளையடிப்பது, அடுத்தவர் பொருளை ஆட்டைய போடுவது இதுதான் முழு நேர தொழிலாக இருந்திருக்கிறது.. ஏற்கனவே, வேறொரு கேஸில் கைதாகி வேலூர் ஜெயிலுக்கும் போயிருக்கிறார்.

வெளியே வந்ததும், மறுபடியும் இதே தொழிலை ஆரம்பித்துவிட்டார்.. இவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் ஒப்புதல் பெற்று, அதன்படி, 11ம் தேதி மாலை 5 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை சங்ககிரி மகளிர் போலீசார் விசாரணை செய்தார்..

மைதிலி: அப்போது மளிகைக்கடை ராமசாமி வீட்டில் நகை, பணம் திருடியதை மைதிலி ஒப்புக்கொண்டாராம்.. ஆனால், அந்த பணத்தை குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்துவிட்டேன் என்றும் 2 பவுன் தங்க செயினை தீவட்டிப்பட்டியில் ஒரு நகை கடையில் விற்று விட்டேன் என்றும் கேஷூவலாக சொன்னாராம்.. உடனே சங்ககிரி போலீசாரும் மைதிலியை, மறுபடியும் வேலூர் ஜெயிலுக்கே கேஷூவலாக அனுப்பிவைத்து விட்டனர்.

பொதுவாக, சிறைச்சாலை என்பதே, குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் இடமாக கருதப்படுகிறது.. தங்களுடைய தவறுகளை நினைத்து வருந்தக்கூடிய தளமாகவும் அறியப்படுகிறது.. ஆனாலும், மைதிலி போன்றோர் மட்டும் இதற்கு விதிவிலக்கு போலும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+