அதிகாரிகளை மாற்றினால் சரியாகிவிடுமா? பொம்மை முதல்வர்.. திறனற்ற ஆட்சி..! விளாசிய எடப்பாடி பழனிசாமி..!
சேலம்: சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐஜியை மாற்றினால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து விடாது.. நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்கமுடியும் என தமிழக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," ஓபிஎஸ் பற்றி எந்தவித கேள்விக்கும் இனி பதில் இல்லை.. அவரைப் பற்றி கேள்விக்கு எந்த பதிலளித்தாலும் திரித்து செய்தி வருகிறது

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐஜியை மாற்றினால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து விடாது.. நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்கமுடியும்;இன்றைக்கு காவல்துறை பொறுப்பை முதலமைச்சர் வகித்து வருகிறார்.
சரியான முறையில் திறமையாக செயல்படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும்.
பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. அதனால் முழுமையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற நிலை இல்லை. அதனால் காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. குறிப்பாக கொலை,கொள்ளை,திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது..எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்யமாக இருந்து வருகிறது. இதை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறையிற்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு ரவுடிகளை அடக்க முடியும். மேலும்தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை
ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்த கொலை திட்டமிட்டு தான் அரங்கேற்றி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர்; கைது செய்யப்படவில்லை..அவர்கள் உண்மையான குற்றவாளி அல்ல; போலி குற்றவாளி.. எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். உண்மை குற்றவாளி குறித்த சந்தேகங்களை போக்குவது அரசின் கடமையாகும்.
திறமையற்ற முதலமைச்சர் ஆண்டு கொண்டு இருக்கிறார்; அனைத்து இலாக்காக்களும் தேய்ந்து போய் இருந்து வருகிறது. எந்த துறையிலும் வளர்ச்சி கிடையாது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.. இதற்கு தீர்வு காண திமுக ஆட்சியிலும் திறமை இல்லை. தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.
திமுகவின் கோவை,நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் தான் தெரியும். எல்லாம் உட்கட்சி பிரச்சினை. பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று நினைக்கிறேன். அவர்களுடன்ன் ஒற்றுமை கிடையாது. இங்கு மட்டும் இல்லை, காஞ்சிபுரத்திலும் இவ்வாறு தான் செய்தி வருகிறது.
ஓபிஎஸ் குறித்தும், வெளியேற்றப்பட்டவர்கள் குறித்தும் கேள்வி கேட்டால் விறுவிறுப்பான செய்திக்காக எங்களிடம் பதில் எதிர்பார்க்கிறார்கள்..ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்த்த முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இணைக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இணைக்கப்படுவாரா என கேட்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை, கட்சிக்காரனை அடிக்கவில்லை, கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை,எந்த பொருளையும் தூக்கிச் செல்லவில்லை .
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி ஆய்வு செய்து வருகின்றனர். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அதிமுகவின் பெயர் வர வேண்டும் என்பதற்காக வேண்டுமேன்றே திட்டமிட்டு அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்காக தான் பார்க்கப்படுகிறது.. இது உண்மை அல்ல" என தெரிவித்தார்.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்












Click it and Unblock the Notifications