கல்யாணமாகி 6 மாசத்தில் மனைவி 4 மாத கர்ப்பம்.. கொழுந்தியாள் 2 மாத கர்ப்பம்.. சேலம் வங்கி ஊழியர் கைது
சேலம்: கல்யாணமாகி 6 மாதத்தில் மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கொழுந்தியாளை தன் வலையில் வீழ்த்தி, அவரை 2 மாத கர்ப்பமாக்கி உள்ளார் தனியார் வங்கி ஊழியர், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த சேலம் ஓமலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பில்பருத்தியைச் சேர்ந்த இளைஞருக்கு 27 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடன் தொகை வசூலிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

வங்கி ஊழியருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. மனைவியுடன் அந்த வங்கி ஊழியர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அக்காள் கணவர் தானே , என கொழுந்தியாளான 16 வயதான பாலிடெக்னிக் மாணவி சகஜமாக பழகி வந்துள்ளார்.
இதனிடையே வங்கி ஊழியரின் மனைவி கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில் தன் மனைவி கர்ப்பமான பிறகு அவரது காம பார்வையை கொழுந்தியாள் மீது பாய்ந்தது. வெள்ளந்தியாக மாமா.. மாமா.. என பழகிய சிறுமியிடம் ஜாலியாக பேசி வந்துள்ளார். மனைவிக்கு சந்தேகம் வராத அளவிற்கு கொழுந்தியாளுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் வங்கி ஊழியர். கொழுந்தியாளிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து 16 வயது சிறுமியை தன வசப்படுத்தி உள்ளார்.
வங்கி ஊழியரின் வலையில் 16 வயது மாணவி விழுந்தார். ஆட்கள் இல்லாத வனப்பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் உணர்வை தூண்டி விட்டு உல்லாசம் அனுபவித்திருக்கிறார். அக்காள் கணவர் இப்படி தன்னை செய்ததை உடனே அந்த சிறுமி வீட்டில் சொல்லவில்லை. ஒரு கட்டததில் 16 வயது மாணவியின் உடல்நலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவள் கர்ப்பம் ஆனது தெரியவந்தது. பெற்றோர் அழைத்து கேட்ட போதும் சொல்ல மறுத்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பத்துக்கு காரணம் அக்காள் கணவர் தான் என குண்டை தூக்கி போட்டு அதிர வைத்தார்.
இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிகிச்சைக்காக அவளை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய அக்காள் மாப்பிள்ளையோ தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த தனியார் வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருமணமான 6 மாதத்தில் அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையல், காம பார்வையால் கொழுந்தியாளை வீழ்த்தி அவரையும் 2 மாத கர்ப்பமாக்கிய வங்கி ஊழியரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே நேரத்தில் வங்கி ஊழியர் அக்கா, தங்கை இருவரையும் கர்ப்பாக்கிய சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications