Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் பண்ணை வீட்டில் நடமாடும் உருவம்? "இவங்களா".. புட்டு புட்டு வைத்த டேவிட்சன்! கொங்குவில் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சேலம்: பெரும்பாலும் நிலம் தொடர்பான வழக்கு, அடிதடி, விபத்து வழக்குகள் சமீபகாலமாக அதிகமாக வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதம் 150-160 கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது மாதம் 70 கொலைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.. அந்தளவிற்கு மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர், டி.ஐ.ஜி., மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

1990களின் காலகட்டத்தில், பவாரியா கொள்ளையர்கள் என்ற பெயரை கேட்டாலே குலைநடுங்கிவிடும்.. மிகமிக கொடூரமான கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பவாரியாவினர்.. குறிப்பாக, 1995 டூ 2005ம் வருடங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீடுகளை கண்காணித்து, அந்த வீடுகளில் கொள்ளையடித்து வந்தனர்.

Salem Farm House Bawaria Gang

இந்த கொள்ளையை நடத்துவதற்காகவே, பிரத்யேகமான ஆயுதங்களை தயாரித்து, வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு லாரி மூலம் கொண்டு வரும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.. அந்த ஆயுதங்களை குறிப்பிட்ட இடங்களில் மறைத்து வைத்து, பிறகு நோட்டமிட்டு தயாராக உள்ள வீடுகளில் கொள்ளையடிப்பார்கள்.

ஆபரேஷன் பவாரியா

இதற்கு பிறகுதான் தமிழக போலீஸ் களத்தில் இறங்கி அதிரடியை காட்டியது.. ஒவ்வொருவரையும் குறி வைத்து கைது செய்தது.. இதற்கு பிறகு, பவாரியா கொள்ளையர்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.. நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் புலிகளை கொன்று, புலி நகங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய, இந்த பவாரியாவினர் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் சமீபத்தில் கசிந்தன..

புலி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு சீன சந்தையில் நல்ல விலை உள்ளதால், இவற்றை வேட்டையாடுவதில் இந்த கும்பல் ஈடுபடுவது வாடிக்கை என கூறப்படுகிறது. இத்தகைய கொடூர கும்பல் மீண்டும் தமிழ்நாட்டின் வனப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க, அனைத்து புலிகள் காப்பகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் பவாரியா என்பது 1995-2006 காலகட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை, கொலை மற்றும் கொள்ளை ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையாகும், இது பவாரியா சமூகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களின் மோசமான குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

கொள்ளை சம்பவங்கள்

'பவாரியா கொள்ளையர்கள்' என்ற பெயரைக் கேட்டாலே 1996ஆம் ஆண்டு கால கட்டங்களில் அச்சப்படாதவர்களே இல்லை. அவ்வளவு கொடூரமாக கொலை, கொள்ளையில் ஈடுபடும் இவர்கள்தான் பவாரியாவினர். 1995 - 2006ஆம் காலக் கட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீடுகளை கண்காணித்து, அங்கு கொள்ளை அடித்து வந்தனர்.

மேலும் இதற்காகவே அவர்கள் ஆயுதங்களை தயாரித்து, வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கு லாரி மூலம் சரக்குகளைக் கொண்டு வரும் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். இவ்வாறு வருபவர்கள், சரக்குகளை உரிய இடங்களில் இறக்கிய பிறகு, அருகில் உள்ள வீடுகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

மீண்டும் நடமாட்டம்?

1995ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை சுமார் 200 வழக்குகள் இவர்கள் மீது தமிழ்நாடு காவல் துறையினர் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்தனர். அப்போதைய பேசும் பொருளாக இருந்த இந்த பவாரியா கொள்ளையர்கள் பற்றி, தற்போது மீண்டும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும் 90கள் காலகட்டம் அளவுக்கு இவர்களின் நடமாட்டம் தற்போது தமிழகத்தில் இல்லை.. இந்த கொள்ளையர்கள் பற்றிதான், கார்த்தி நடித்த தீரன் படத்திலும் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார்கள்..

தற்போது சமீபகாலமாகவே, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் பெருகி வருகின்றன.. இதில் தொடர்புடையவர்களையும் காவல்துறை கைது செய்தபடியே உள்ளது..

இப்படிப்பட்ட சூழலில், சேலத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

"தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கைது எண்ணிக்கை, கண்டுபிடிக்காமல் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்,..

நிலம் தொடர்பான வழக்குகள்

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், சேலம் ஊரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்ய உள்ளோம்.. குற்றம் அதிகமாக நடக்கும் பகுதிகள், குற்றம் குறைவாக நடக்கும் பகுதிகள், குற்றத்திற்கான காரணம் என ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்...

பெரும்பாலும் நிலம் தொடர்பான வழக்கு, அடிதடி, விபத்து வழக்குகள் அதிகமாக வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதம் 150-160 கொலைகள் நடக்கும். ஆனால், தற்போது மாதம் 70 கொலைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.. அந்தளவிற்கு மாவட்ட எஸ்.பி., மாநகர ஆணையர், டி.ஐ.ஜி., மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

தோட்டங்களில் சம்பவம்

கொலைகளைப் பொறுத்தவரை தென்மண்டலம் முதலிடத்திலும், மேற்கு மண்டலம் 2வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பண்ணைத் தோட்டங்களில் 26 கொலைகள் நடந்துள்ளன.

பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கு வடமாநில பவாரியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து கொலைகளும் வெவ்வேறு காரணத்திற்காக நடந்திருக்கின்றன.. எனவே இந்த கொள்ளைகளுக்கும் பவாரியா கும்பலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

பண்ணை வீடுகள்

ஆனால், கொங்கு மண்டலத்தில் பண்ணை வீடுகளில், தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா, வார்னிங் சிஸ்டம் வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை ஜியோ-டேக் மூலம் பதிவு செய்து, கேமரா எங்கே உள்ளது, எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்..

சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தந்துள்ள இந்த நம்பிக்கையானது, சேலம் மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்துக்குமே பெருத்த நிம்மதியை தந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+