அழகாய் இருக்கிறாய்.. சேலம் அரசு பள்ளி மாணவியுடன் நெருக்கமாய் போட்டோ.. ஆசிரியரால் ஆடிப்போன ஓமலூர்
சேலம்: சேலம் அரசு பள்ளி மாணவி, ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.. ஓமலூர் போலீஸில் இவர் தந்த புகார், ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்தையும் அதிர வைத்து வருகிறது. இது தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூர்.. இங்கு அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ள இந்த மாதிரி பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.. அந்தவகையில், ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவியும், ஹாஸ்டலிலேயே தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார்.

உடற்கல்வி ஆசிரியர்: இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சிவக்குமார் பணியாற்றி வருகிறார்.. 40 வயதான இவர், ஈரோட்டை சேர்ந்தவர்.. இவர், கடந்த 2-ந் தேதி, அந்த மாணவிக்கு சில்மிஷம் செய்து, பாலியல் இம்சை தந்து வந்ததாக தெரிகிறது..
இந்த சம்பவம் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்..
மாணவி சிவக்குமார்: இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்த அதிகாரிகள் , சம்பந்தப்ப்டட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், மாணவிக்கு சிவக்குமார் பாலியல் தொல்லை தந்தது உறுதியானது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமார் கைதாகி உள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார் சிவக்குமார்.. பாதிக்கப்பட்ட மாணவிடம் நெருக்கமாக நின்றுக்கொண்டு போட்டோ எடுத்துள்ளார்..
இந்த போட்டோவை தன்னுடைய செல்போனிலும் எடுத்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.. பிறகு மாணவியிடம் தினமும் அந்த போட்டோவை காட்டி வர்ணித்திருக்கிறார்.. "நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்" என்று சொல்லியே பாலியல் தொல்லை தந்ததாக சொல்லப்படுகிறது.
சிவக்குமார்: ஆசிரியரின் தவறான நோக்கம் அறிந்த அந்த மாணவி, சிவக்குமாரிடமிருந்து செல்போனை பிடுங்கி அதிலிருந்த தன்னுடைய போட்டோவை அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் தந்துள்ளார்... இதைத்தவிர, 1098 உதவி எண்ணுக்கும், பள்ளி சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.. பிறகு குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, இறுதியாக போலீசுக்கு புகார் தந்திருக்கிறார்கள். தற்போது ஆசிரியரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications