ஜொள்ளு விட்ட ஜெயில் வார்டன்.. பூரா அசிங்கம்.. முருகேஸ்வரிக்கு வந்துச்சே ஆத்திரம்.. உறைஞ்சு போன சேலம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் சிறையில் நடந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.. கடைசியில் விஜயகாந்த் அசிங்கப்பட்டுவிட்டார்.. என்ன நடந்தது?

சேலம் மத்திய சிறையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என்று 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களை அவர்களது உறவினர்கள், சட்டவிதிகளின்படி அவ்வப்போது வந்து பார்த்து செல்வார்கள்.

Salem Jail Warden Vijayakanth and Do you know what happened actually in the Salem Central Jail

சிவக்குமார்: அப்படித்தான், சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.. இவர் நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த வளையாப்பட்டியை சேர்ந்தவர்.. 38 வயதாகிறது.. பைக் திருட்டில் மோகனூர் போலீசார் இவரை தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. கடந்த ஜூலை 23ம் தேதியில் இருந்து, இந்த சேலம் ஜெயிலில்தான் அடைக்கப்பட்டார்..

இவரை சந்திக்க, அவரது மனைவி முருகேஸ்வரி அடிக்கடி ஜெயிலுக்கு வந்து போயிருக்கிறார்.. முருகேஸ்வரிக்கு 33 வயதாகிறது.. உரிய நாளில் மனு அளித்து, ஜெயிலிலுள்ள கணவரை சந்தித்து வந்தார்.

ஜெயில் வார்டன்: கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஜெயிலுக்கு வந்திருக்கிறார்.. கணவரை சந்திப்பதற்காக, இவருக்கு ஜெயில் வார்டன் ஒருவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.. எப்போது வந்தாலும், கணவரை சந்திக்க அந்த வார்டன் உதவி செய்வதாகவும் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால், முருகேஸ்வரியின் செல்போன் நம்பரை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போதிருந்தே முருகேஸ்வரிக்கு டார்ச்சர் ஆரம்பமாகிவிட்டது.

Salem Jail Warden Vijayakanth and Do you know what happened actually in the Salem Central Jail

முருகேஸ்வரியின் செல்போனுக்கு அடிக்கடி போனை செய்து பேசியிருக்கிறார் வார்டன்.. தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும் அனுப்பியிருக்கிறார்.. அதைவிட உச்சக்கட்டமாக, வீடியோ கால் செய்தும், அசிங்க அசிங்கமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த வார்டனின் தொல்லை அதிகமாகவும், முருகேஸ்வரி கொதித்து போனார்.

அதிகாரிகள்: உடனே இதுகுறித்து, சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின் பேரில் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் மற்றும் அதிகாரிகள் அந்த வார்டனிடம் விசாரணை நடத்தினார்.. பிறகு, முருகேஸ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள், வார்டன் அனுப்பிய வீடியோக்களை எல்லாம் அனுப்புமாறு சொன்னார்கள்.. ஆனால் அந்த பெண்ணோ, அந்த வீடியோக்களை எல்லாம் பார்த்ததுமே அழித்து விட்டதாக சொன்னார்.

எனவே, விசாரணையில் சிக்கல் வந்ததால், இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார்.. இதற்கு பிறகு, வார்டன் மற்றும் முருகேஸ்வரியின் 2 பேரின் செல்போன்களும் கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது..

அதனை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீஸ், எவ்வளவு நேரம் வார்டன் அந்த பெண்ணிடம் பேசினார், என்னென்ன பேசினார், எத்தனை ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்தனர்.. இப்போது அந்த ஆய்வின் முடிவு வந்துவிட்டது.. இதனை அறிக்கையாக தயாரித்து சிறை சூப்பிரண்டிடமும் வழங்கியிருக்கிறார்கள்..

Salem Jail Warden Vijayakanth and Do you know what happened actually in the Salem Central Jail

செல்போன் நம்பர்: முருகேஸ்வரிக்கு பாலியல் டார்ச்சர் தந்தவர் பெயர் விஜயகாந்த்.. 32 வயதாகிறது.. நலம் விசாரித்தபடியே பரிவாக பேசி செல்போன் நம்பரை வாங்கியிருக்கிறார்.. அதற்கு பிறகுதான், டார்ச்சரை தர ஆரம்பித்தது தெரியவந்தது. ஆபாசமாக பேசியதும் ஊர்ஜிதமாகி உள்ளது.. இதையடுத்து, வார்டன் விஜயகாந்தை, சஸ்பெண்ட் செய்து, சிறைத்துறை எஸ்பி வினோத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சிறை வார்டன்: இப்படி ஒரு பாலியல் புகாரை, மேலிடத்துக்கு கொண்டுபோனதே, சிறைக்கைதி சிவக்குமார்தானாம்.. முருகேஸ்வரிக்கு நடந்த அக்கிரமத்தை தன்னுடைய குடும்பத்தார் வாயிலாக தெரிந்து கொண்ட சிவக்குமார், சிறை எஸ்பியிடம் புகார் தந்தாராம்.. அதற்கு பிறகுதான் இந்த நடவடிக்கை சீரியஸ் ஆக கையில் எடுக்கப்பட்டுள்ளது. கைதியிடம ஜொள்ளுவிட்டு, விஜயகாந்த் சஸ்பெண்ட் ஆகியிருப்பது, பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+