சேலம்: 146 அடி உயரம் கொண்ட.. உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன் குடமுழுக்கு கோலாகலம்
சேலம்: சேலத்தில் புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
Recommended Video
சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம். இங்கு 2015 ஆம் ஆண்டு பிரம்மாண்ட முருகனின் திருமேனியை நிறுவத் திட்டமிட்டு 2016 ஆம் ஆண்டு முதல் இந்த திருப்பணி தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிரது. அதற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

முருகன்
தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது. உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை 140 அடி உயரமாகும். ஆனால் இந்த சேலம் முத்துமலை முருகன் சிலையின் உயரமோ 146 அடியாகும்.

உலகிலேயே உயரமான சிலை
இதனால் உலகிலேயே இந்த சிலைதான் உயரமான முருகன் சிலையாகும். மலேசியாவில் இந்த சிலையை வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதியே இந்த சேலம் சிலையையும் வடிவமைத்துள்ளார். ஒரு கையில் வேல் மறு கையில் ஆசி வழங்கும் திருக்கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார்.

சேலம் முருகன்
சேலம் முருகனின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றப்பட்டுள்ளது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த முருகன் எழுந்தருளியுள்ளார். இங்கு பக்தர்களுக்கான சிறப்பம்சம் ஒன்று உள்ளது.

பாலாபிஷேகம் செய்ய லிப்ட்
அதாவது திருமுகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தாலும் பாலாபிஷேகம் செய்ய நினைத்தாலும் முருகன் சிலைக்கு பின்புறம் லிப்ட் வசதி உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள், முருகா, அரோகரா, கந்தா என முருகனின் பெயர்களை அழைத்தனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications