சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அனுப்பியுள்ள ஆணையில் தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலையில் முன்பு பதிவாளராக இருந்த அங்கமுத்து, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று, பெருந்துறையில் உள்ள தனது வீட்டில் விஷ மாத்திரைகளைத் தின்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின்னர் சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் மணிவண்ணன், 17.8.2018ம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார்.

இதனையடுத்து கணினி அறிவியல் துறைத்தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் தங்கவேல் வசம் பதிவாளர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
தங்கவேல் பதிவாளர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நாள் முதலே புகைச்சல்தான். பேராசிரியர் தங்கவேல், எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., பி.ஹெச்டி., ஆகியவற்றில் கணிதத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து, அதிலேயே முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். ஆனால் அவரை கணிதத்துறைக்கு தலைவராக நியமிக்காமல், மாறாக கணினி அறிவியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெரியார் பல்கலையில் கடந்த 2005ம் ஆண்டில்தான் புதிதாக இந்தத் துறை தொடங்கப்பட்டது. அந்தத் துறை தொடங்கப்பட்டது முதலே பேராசிரியர் தங்கவேல், கணினி அறிவியல் துறைத்தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2015-2016ம் ஆண்டு பல்கலையின் வரவு, செலவினங்களை தணிக்கை செய்த அதிகாரிகள், பேராசிரியர் தங்கவேல் உள்ளிட்ட சிலர், தாங்கள் படித்து வந்த துறையைவிட்டு, சம்பந்தமே இல்லாமல் வேறு துறைகளில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், இது, பல்கலை மானியக்குழு விதிகள்-2000 மற்றும் 2010க்கு எதிரானது என்றும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். உதாரணமாக, கணிதத்தை முதன்மைப் பாடமாக படித்துள்ள பேராசிரியர் தங்கவேல், கணினி அறிவியல் துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை கடுமையாக ஆட்சேபித்து சுட்டிக்காட்டியுள்ளது தணிக்கை அறிக்கை.
தங்கவேல், பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலான நிலையிலும்கூட அதைப்பற்றி பல்கலை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது பல்கலை நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. இவரிடம் கணினி அறிவியல் துறையில் பி.ஹெச்டி., ஆராய்ச்சிக்கு சேர்ந்த சிலர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆராய்ச்சியை நிறைவு செய்ய முடியாமல் தடுமாறுவதாகவும் பல்கலை வட்டாரத்தில் சொல்லப்பட்டது.
சர்ச்சைகளுக்கு இடையில்தான் கடந்த 2018ஆம் ஆண்டு பேராசிரியர் தங்கவேலிடம், பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தநாள் முதலே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். பதிவாளர் தங்கவேல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பொருளியல் துறை உதவி பேராசிரியராகவும், பெரியார் பல்கலை. ஆசிரியர் சங்க தலைவருமான வைத்தியநாதன் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தலைமறைவானார் தங்கவேலு. தலைமறைவாக உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய பல்கலை. ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான ஊழல் புகாரில் பதிவாளர் தங்கவேலு, இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியராக பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம்கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.
இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார். அங்கு பதிவாளராக பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர் இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அரசு சம்பளத்தில் பணியாற்றக்கூடிய தங்கவேல் 'அப்டெக்கான் ஃபோரம்' என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் உடனடியாக அவரை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும்; இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தற்போது வரை தங்கவேல் தலைமறைவாக உள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தை சுற்றி கடந்த பல ஆண்டு காலமாகவே நிறைய சர்ச்சைகள் சுற்றி வருகின்றனர். தங்கவேலு மீதான புகார்களை விசாரிக்க கடந்த 2022ஆம் ஆண்டு பழனிச்சாமி தலைமையில் விசாரணை குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்று துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications