ஒரு பக்கம், பியூட்டி பார்லர் பெண்கள்.. இப்போ குத்தாட்டம்.. "முட்டை அசாருதீனை" தட்டி தூக்கிய போலீஸ்
சேலம்: கையை வைத்தால் தலையை வெட்டுவோம் என்று கூறி, கானா பாடலுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி சேலம் அஸ்தம்பட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முட்டை என்கிற அசாருதின். இவர் அழகாபுரம் பள்ளப்பட்டி அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களில் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும் புகார் உள்ளது.
இது தவிர சேலம் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அழகாபுரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கை வைத்தால் தலை
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அசாருதீன் ஆதரவாளர்கள் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள பிரதான சாலையில் பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளனர். அவருக்கு, மாலை போட்டு கிரீடம் அணிவித்து ஆடல் பாடலுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சியும் அவரை புகழ்ந்து பாடும்போது அவர் மீது "கை வைத்தால் தலையை துண்டித்து கையில் தொங்க விடுவோம்" என்ற பாடலுடன் கூடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

மது விருந்து
மேலும் பிறந்தநாள் விருந்தாக சொகுசு பங்களா ஒன்றில் மதுவுடன் நண்பர்களுக்கு விருந்து கொடுத்து, டிக்டாக் பாணியில் பேசி அதனை வெளியிட்டதாகவும் செய்திகள் பரவியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வைரல் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

ரவுடி கைது
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதையடுத்து சம்பவத்திற்கு காரணமான அசாருதீன் என்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்தவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேர்தல் நேரம்
தேர்தல் நேரத்தில் மக்களை மிரட்டும் வகையில் இடம்பெற்ற கானா பாடலும் பார்ப்பவர்களை மிரளவைக்கும் அவரது ஆதரவாளர்களும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பெண்கள் பிரச்சினை, இதில் இந்த பிரச்சினை வேறா என்று கேட்கிறார்கள் போலீசார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications