ரூ.10 சாப்பாட்டில் விழுந்த சேலம்.. ரூ.500 கோடியை விஜய பானுவிடம் இழந்தும்.. இதோ இன்னொரு "டபுளிங்"
சேலம்: பொதுமக்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஏஜென்ட்டுகள் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் பணமோசடி நடந்த விவகாரம், மிகப்பெரிய பரபரப்பை இன்னமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..

ஆந்திரா, வேலூர் தவிர, சேலத்தில் மட்டுமே 2000க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்திருக்கிறார் அந்த அறக்கட்டளையின் நிர்வாகி விஜயபானு.
10 ரூபாய்க்கு சோறு போட்ட விஜயபானு
சேலம் மக்கள் பலர் எங்களை தேடி வந்தனர். பயிற்சியின்போது, 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தோம்.. இப்படி அறிவித்ததுமே நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. அதன் பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தை, அறிமுகம் செய்தேன் என்று கைதான விஜயபானு வாக்குமூலமும் தந்துள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்திருக்கிறார்கள்.. பொதுமக்களை ஏமாற்றிய நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதன் விசாரணை தீவிரமாகி வருகிறது. இந்த பரபரப்பே இன்னமும் அடங்காத நிலையில், பொதுமக்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக தருவதாகக் கூறி மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது.. .
மீண்டும் ஒரு பண மோசடி
சேலம் சொர்ணபுரி அய்யர் தெருவில் 2 வருடங்களுக்கு முன்பு ராஜேஷ் (35) என்பவர் கிரீயேட் பியூச்சர் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கினார். பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, அதற்கான முகவர்களையும் நியமித்தார். இதை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள், ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.
இப்போது, அந்த நிறுவனத்தை மூடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நிதி நிறுவனத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீஸார் நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கோடி கணக்கான பணம் சுருட்டல்
அப்போதுதான், நிதி நிறுவன உரிமையாளர்களான ராஜேஷ், ஹரி பாஸ்கர், மற்றொரு ராஜேஷ் அவரது மனைவி சத்திய பாமா ஆகியோர் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.2.85 கோடி ரொக்கம், 300 கிராம் தங்கம், 200 கிராம் வைரம், இரண்டு கிலோ வெள்ளியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.
இதனிடையே, விசாரணையின்போது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த மோசடி நிறுவனத்தைச் சேர்ந்த 10 முகவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.. இறுதியில் கைதான மொத்தம் 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன், நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications