நான் செத்தா அவரும் இருக்கமாட்டாரு.. உணவு தராமல் விரட்டிய மகன்கள்.. சேலத்தில் தவிக்கும் முதிய தம்பதி
சேலம்: பிள்ளைகள் விரட்டி அடித்ததால் நொந்துபோன சேலம் முதிய தம்பதி, இவங்களை நம்புவதற்கு சாப்பாடு இல்லாமல் செத்து போயிடலாம் என்று கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.
முதியோர்கள் கடைசி காலங்களில் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு சாப்பாட்டுக்குகூட அவர்களிடம் கையேந்தும் நிலையில் வாழ்கிறார்கள். மகன் பெயரில் வீடு, மகளுக்கு நகைகள் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கூட கூனிக்குறுகி வாழும் நிலை உள்ளது.

மருமகள் என்ன சொல்வாளோ என்று பயந்து பயந்து சாப்பாடு சாப்பிடும் நிலையும், மகன் என்ன நினைப்பானோ, மகள் என்ன நினைப்பாளோ என்று சாப்பாடு கேட்க கூச்சப்படும் நிலையே பல இடங்களில் உள்ளது. முதியோர்கள் கடைசி காலத்தில் தங்கள் பெயரில் பணம் சேமிக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு சம்பவங்களும் நினைவுபடுத்துகின்றன.
முதியவர்கள் இறக்கும் வரை தங்களிடம் இருக்கும் சொத்துக்களை, அல்லது பணத்தை பிள்ளைகளுக்கு கொடுக்ககூடாது என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம். அதேபோல் கடைசி காலத்தில் பிள்ளைகளை எதிர்பார்த்து நிற்கும் நிலை, எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. ஏனெனில் அதைவிட கொடுமையான எதுவும் இல்லை.. கடைசி காலத்தில் பிள்ளைகள் சந்தோஷமாக பராமரிக்க வேண்டும்.. மாறாக சுமையாக கருதுவது சமூகத்தின் சாபக்கேடு.
வசதியான அல்லது ஓரளவு சம்பாதித்து வாழ்ந்த பெற்றோர்கள், கடைசி காலத்தில் பிள்ளைகளை எதிர்பார்த்து நிற்காமல் இருக்க நன்றாக இருக்கும் காலத்திலேயே, முதலீடுகளை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் கடைசி காலத்தில் பிள்ளைகள் உங்கள் காலை சுற்றிவருவார்கள். உங்களுக்கான மரியாதையும் இருக்கும்.
அதேநேரம் வசதியற்ற, கடினமாக உழைத்து பிள்ளைகளை கரைசேர்க்கவே பணம் முழுவதையும், உடல் உழைப்பையும் கொட்டிய பெற்றோர், தங்கள் நிலையை நினைத்து நிச்சயம் கலங்க வேண்டாம். ஏனெனில் உங்கள் பிள்ளைகள் உங்களை காக்க மறுத்தால், முதியோர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் கீழ் வாழ்வதற்கான மாதாந்திர பராமரிப்பு தொகையை பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, சட்ட ரீதியாக பராமரப்பு தொகை பெற உதவுவார்கள். அவர்கள் மாதாந்திர பராமரிப்பு தொகை தரமறுத்தால், சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், நிச்சயம் உங்களை கைவிட மாட்டார்கள். பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்களை பறித்து பெற்றோரின் பெயருக்கே மறுபடியும் மாற்றவும் முடியும். மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டு நிவராணமும் பெற முடியும்..
சரி விஷயத்திற்கு வருவோம். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குட்டப்பட்டி அம்மன் கோவிலூரில் வசிக்கிறார்கள் முதிய தம்பதி. இந்த முதிய தம்பதியை உணவுக்கு கூட பணம் தராமல் மகன்கள் விரட்டி அடித்துள்ளனர். ஆதரவு இன்றி நிர்கதியான பெற்றோர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வந்து குறைகளை சொல்லி புகார் அளித்தனர். அதன் பின்னர் தங்கள் நிலையை எண்ணி கதறி அழுதபடி அந்த பெற்றோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் "மேட்டூரை அடுத்த குட்டப்பட்டி அம்மன் கோவிலூரில் எங்கள் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்தோம். அதனை விற்று தின்றுவிட்டு ஜீவமானம்சம் கொடுக்கவில்லை.. ஒரு பைசா கூட எங்களிடம் இல்லை.. இரண்டு பேரும் வயசான காலத்தில் பிழைக்க முடியவில்லை. சாவுறதுக்கு கூட வழியில்லை. அதனால் தான் இரண்டு வருசமாக இங்க வந்து போகிறோம். பிள்ளைகள் காசு கொடுக்காமல் விரட்டிவிட்டார்கள். எங்க போய் பார்ப்பியோ பாரு.. என்னால் தரமுடியாது என்கிறார்கள்.
நாங்கள் கொடுத்த காடு மூன்று கை மாறி போய்விட்டது என்றும் எங்கே போனாலும் ஜெயிக்க மாட்டாய் என்று பேசுகிறார்கள். என் மகனே எங்கேயோ போய் சாவு என்கிறார். பிழைக்க எதாவது வழி இருந்தா போதும் கண்ணு.. தினமும் ஆஸ்பத்திரி போகனும்.. இவங்கள நம்புறதுக்கு செத்தே போயிடலாம். நான் செத்தா அவரு இருக்கமாட்டாரு.. இரண்டு பேரும் ஒட்டுக்கா செத்துபோகலாம்" என்று கண்ணீருடன் முதியவர்கள் கூறினார்கள். பின்னர் வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications