ஆடையில்லாமல் வீடியோ கால்.. இன்ஸ்டா காதல் வலையில் ப்ளஸ் 2 மாணவி! மறக்க முடியாத சம்பவம்.. ஷாக் சேலம்
சேலம்: இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பழகி அவரை காதலிப்பதாக கூறி வீடியோ காலில் நிர்வாணமாக நிற்க வைத்து அதனை பதிவு செய்து மிரட்டியதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பின் தெரியாத நபர்களிடம் பழகி சிக்கலில் சிக்கினாலும் தைரியமாக அந்த பெண்ணே புகார் அளித்ததால் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் எப்போதும் செல்போனில் மூழ்கி கிடப்பவர்கள் அதிகம். குறிப்பாக இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. முன்பின் தெரியாத நபர்களிடம் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்த கதைகளும் உண்டு.
அந்த வகையில் காதலன் என நம்பி வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய இளம் பெண், தற்போது அதனாலேயே சிக்கலை சந்தித்து இருக்கிறார். அரசு சார்பில் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் சேவை வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இந்த எண்ணுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

அந்த வகையில் நேற்று அந்த எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி பேசியிருக்கிறார். அந்த விவசாயியின் மகள் மல்லூர் அருகே இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும், அந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டுவதாகவும், அவரை தனிமையில் இருக்க வேண்டும் என அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதை அடுத்து இந்த தகவல் உள்ளூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் சிறுமி தங்கி இருந்த வீட்டை சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சுற்றித்திரிந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பதும், மற்றொருவர் எருக்கஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த முகமது அலி என்பதும் தெரிய வந்தது. முகமது அலி மெக்கானிக்காகவும், கிஷோர் லேப் டெக்னீசியன் ஆகவும் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்வாண வீடியோக்களை வைத்து மாணவியை மிரட்டியதை ஒப்பு கொண்டுள்ளனர். இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர் .
அவர்களும் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டது கிஷோர் தான். இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவியுடன் கிஷோர் பழகி உள்ளார். முதலில் காதலிப்பதாக கூறி அவரிடம் நீண்ட நாட்களாக பேசி வந்துள்ளார். தொடர்ந்து மாணவியிடம் நைசாக பேசி அவரது ஆபாச புகைப்படங்களை பெற்றிருக்கிறார். ஒருநாள் வீடியோ காலில் உடைகள் இன்றி வரவேண்டும் என்றதும் முதலில் மாணவி மறுத்து இருக்கிறார். அப்போது நாம் காதலர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என பேசி மாணவியை உடைகள் இன்றி வீடியோ காலில் வர வைத்துள்ளார். அப்போது அதனை ரெக்கார்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நண்பன் முகமது அலியுடன் சேலம் வந்த கிஷோர் மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுத்த நிலையில் ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதை அடுத்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூற அவர் குழந்தைகள் உதவி எண்ணை அழைத்து புகார் தந்துள்ளனர். இதை அடுத்தே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். தற்போது அவர்களது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வேறு யாரையாவது அவர்கள் இதுபோல தொல்லை செய்திருக்கிறார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications