தவெகவினர் சொல்வது பொய்.. சேலம் விஜய் மீட்டிங்கில் இறந்த சூரஜ்க்கு என்ன நடந்தது? நண்பர் உருக்கம்
சேலம்: சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று மகாராஷ்டிராவை சேர்ந்த 35 வயது இளைஞர் சூரஜ் இறந்தார். அவர் உடல்நலக்குறைவாலும் ஏற்கனவே இருந்த இதய பிரச்சனையாலும் மயங்கி விழுந்து இறந்ததாக தவெகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் சூரஜ்க்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லை. அவருக்கு பாதிப்பு இருந்ததாக தவெகவினர் பொய் சொல்கின்றனர் என்று அவரது நண்பர் மணிகண்டன் கலங்கியபடி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இந்நிலையில் தான் சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் விஜயின் கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளுக்கு அந்த கட்சிகளே கடும் கட்டுப்பாடு போட்டுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி கூட்டத்தில் 5000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
வெயிலில் மயக்கம்
ஆனால் வழக்கம்போல் விஜயை பார்க்க ஏராளமானவர்கள் கூடினர். 5 ஆயிரத்தை விட அதிகமானவர்கள் கூடினர். மதிய வேளையில் மீட்டிங் நடந்ததால் வெயில் வாட்டி வதைத்தது. நாற்காலிகள் எதுவும் போடப்படாததால் நிர்வாகிகள் கால்கடுக்க நின்றனர். வெயில் தாங்க முடியாமல் ஆங்காங்கே சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா இளைஞர் பலி
இருப்பினும் சூரஜ் என்பவர் இறந்தார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.முதற்கட்ட விசாரணையில் அவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 35 வயது ஆவதும் தெரியவந்தது.
இவரது மனைவி பெயர்பிரியங்கா (32). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். சூரஜ் தனது குடும்பத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்ததார். விஜயை பார்க்க அவர் வந்த நிலையில் இறந்தது தெரியவந்தது.
தவெக சொல்வது என்ன?
கணவர் சூரஜ் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மனைவி பிரியங்கா கதறி அழுதார். அது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுபற்றி தவெகவின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தை காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார்.
அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணடைந்தது வேதனை அளிக்கிறது. இளைர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.
நிர்மல் குமார் பேட்டி
அதன்பிறகு சென்னை விமான நிலையத்தில் சிடிஆர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில், ‛சூரஜ்க்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருந்ததாகவும், இன்று காலையில் அசவுகரியத்தை உணர்ந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சொல்கின்றனர். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்’’ என்று கூறினார்.
நண்பர் சொன்ன தகவல்
இதற்கிடையே தான் உடல்நலக்குறைவால் சூரஜ் மயங்கி விழுந்து இறந்ததாக தவெக கூறியதை அவரது நண்பர் மணிகண்டன் மறுத்துள்ளார். இதுபற்றி மணிகண்டன் கூறுகையில், ‛‛நல்லா தான் சூரஜ் வேலை செய்து கொண்டிருந்தார். விஜயை பார்ப்பதற்காக அவர் சென்றார். போன இடத்தில் இப்படியொரு சம்பவம் (இறப்பு) நடந்துவிட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க. நடந்த சம்பவம் என்னவென்று இனி தான் தெரியும்.
நான் அவருடன் வரவில்லை. சம்பவம் பற்றி கேள்விபட்டு தான் நான் ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கிறேன். அவருக்கு எந்த உடல்நல பிரச்சனையும் கிடையாது. அவர் என் நண்பர். அவர் எந்த கட்சியிலும் இல்லை. நண்பர் ஒருவர் மூலமாக பாஸ் வாங்கி கொண்டு வந்தார். அவருக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் அவருக்கு மாரடைப்பு பாதிப்பு இருந்ததாக கூறுகிறார்களே? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு மணிகண்டன், ‛‛அவருக்கு எந்தவொரு உடல்நல பாதிப்பும் கிடையாது. ஆனால் இப்படியெல்லாம் சொல்கிறார்கள். அது சும்மா சொல்கிறார்கள். டாக்டர்கள் இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவரை எனக்கு 20 வருடமாக தெரியும். வேறு எதுவும் வேண்டாம். விட்டு விடுங்கள்'' என்று கண்கலங்க கூறியுள்ளார்.
-
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு












Click it and Unblock the Notifications