Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் இரவில் தனியாக சென்ற இளம் பெண்.. பின்னாடியே ஜவுளிக்கடை ஊழியர்.. தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் திடீரென அந்த பெண் அருகே சென்றார். பின்னர் வாகனத்தை நிறுத்திய அவர், திடீரென அந்த பெண்ணிடம் அத்துமீறினார். இதனால் ஆடிப்போன அந்த பெண், கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து ஒன்று கூடிய பொதுமக்கள் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். அவர் ஜவுளிக்கடை ஊழியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒரே நாளில் சென்னையிலும், சேலத்திலும் சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் ஐடி ஊழியரிடம் அத்துமீற முயன்றவர் விடியும் முன்பு கைதானார். அதேபோல் சேலத்தில் அந்த இடத்திலேயே வசமாக சிக்கினார்.

What happened when a 19-year-old woman was walking alone near the Salem Collector s office

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் இளம்பெண் சேலத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து அரசு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பயிற்சி பெற்று வந்துள்ளார். அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பயிற்சியுடன் கூடிய பணிக்காக நேற்று முன்தினம் வந்துள்ளார். அதற்காக சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இரவு 9 மணியளவில் இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென அந்த பெண் அருகே சென்றதும் வாகனத்தை நிறுத்தினாராம். பின்னர் அந்த இளைஞர், பெண் அருகில் சென்று தவறாக நடக்க முயன்றாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர். அந்த இளைஞரிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதனிடையே ஆத்திரமடைந்த அந்த பெண்ணும் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை தனது செருப்பால் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.. அதைத்தொடர்ந்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (வயது 44) என்பதும், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக சண்முகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே சண்முகநாதனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+