தலைக்கேறிய போதை! தொழிலாளியின் காதை கடித்த நபர்! தமிழகத்தை சேர்ந்தவருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் 47 வயது தொழிலாளியின் காதை கடித்து துப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளிக்கு சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் மனோகர் சங்கர். இவர் சிங்கப்பூருக்கு கட்டட வேலைக்கு சென்றார். அங்கு அவரை போல் பணிக்கு சென்ற தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
இவருடன் 47 வயது நிரம்பிய ஒருவரும் தொழிலாளியாக அங்கு வேலை செய்து வந்தார். மனோகர் சங்கருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி மனோகர் சங்கர் தாங்கள் தங்கியிருந்த கட்டடத்தின் மாடியில் மாடியில் மதுபானம் குடித்தார். அதன்பிறகு போதையில் அவர் 47 வயது தொழிலாளியை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனவருத்தமடைந்த அவர் தன்னை திட்டாமல் இருக்கும்படி மனோகர் சங்கரிடம் தெரிவித்தார். அப்போது தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றவே இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற மனோகர் சங்கர் தனது சக தொழிலாளியான 47 வயது நிரம்பியவரின் காதை கடித்து வைத்தார். ரத்தம் வடிந்த நிலையில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிச சிகிச்சை அளித்தனர். இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‛‛தொழிலாளியின் இடது காதுமடலில் 2 செமீ அளவு துண்டாகி உள்ளது. இருப்பினும் அவர் தொடர் சிகிச்சையால் குணமாகி உள்ளார். இருப்பினும் அவரது காது சிதைந்தது சிதைந்தது தான்'' என தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கு சிங்கப்பூரில் நடந்து வந்தது. இந்நிலையில் தான் குற்றம்சாட்டப்பட்ட மனோகர் சங்கருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மனோகர் சங்கருக்கு 5 மாத சிறை தண்டனையும், 1,000 சிங்கப்பூர் டாலரும் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications