சிங்கப்பூரில் தொழில் தொடங்க ஆசையா? ஆஃபரை அள்ளித்தரும் அரசு! என்ட்ரி பாஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு, வெளிநாட்டு தொழில் முனைவோருக்காக என்ட்ரி பாஸ் என்ற சிறப்புப் பணி விசாவை வழங்குகிறது. இதன் மூலம், அவர்கள் சிங்கப்பூரில் வணிகங்களைத் தொடங்கி நிர்வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுமையான முயற்சிகளையும், வலுவான முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களையும் ஈர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
சிங்கப்பூரில் புதிய நிறுவனத்தை தொடங்கி, அதை நேரடியாக நிர்வகிக்க விரும்பும் வெளிநாட்டு தொழில் முனைவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மூலதன நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியும். இது தவிர, தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், அதாவது புதிய அல்லது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வருபவர்கள் ஆகியோரும் இந்த என்ட்ரி பாஸ்-க்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற இன்குபேட்டர்கள், அல்லது ஆக்சிலரேட்டர்களின் ஆதரவு பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இது இல்லாமல் சாதாரண வணிகங்களுக்கு இந்த விசா என்ட்ரி பாஸ் வழங்கப்படாது. பொதுவாக இந்த விசா ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மற்றும் வணிக செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசா புதுப்பிக்கப்படும்.
பாஸ் வைத்திருப்பவர்கள், தங்கள் மனைவி /கணவர் மற்றும் குழந்தைகளை சிங்கப்பூருக்கு அழைத்து வர முடியும். இதற்கான டிபார்ட்மென்ட் பாஸ் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கவும், படிக்கவும், வேலை செய்யவும் அனுமதி பெறலாம்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனிதவள அமைச்சகம் இணையதளம் வழியாக, இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள், வணிக திட்டம், நிதி ஆதாரத்திற்கான சான்றுகள் மற்றும் இன்குபேட்டர்களின் ஆதரவு கடிதங்கள் அவசியம். பாஸ்போர்ட் விவரங்கள், குடியிருப்பு முகவரி, அல்லது வணிக செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனுக்குடன் அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
என்ட்ரி பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு, 'ஸ்டார்ட் அப் எஸ் ஜி 'போன்ற திட்டங்கள் மூலம், சிங்கப்பூர் அரசு பல உதவிகளை செய்கிறது. எனவே சிங்கப்பூரில் புதியதாக தொழில்களை தொடங்க விரும்புவோர், இந்த என்ட்ரி விசாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications