"சீக்ரெட் மீட்டிங்!" ஒரே இடத்தில் கூடிய சர்வதேச உளவு அமைப்புகள்! பரபரக்கும் உலக நாடுகள்! என்ன மேட்டர்
சிங்கப்பூர்: உலகின் டாப் உளவு அமைப்பு தலைவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்றுகூடி சீக்ரெட் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக சில முக்கிய தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது.
எந்தவொரு நாடும் அமைதியாக இயங்க அரசியல் ஸ்திரத்தன்மை எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு உளவு அமைப்புகளும் முக்கியம். நாட்டில் பிரச்சினை ஏற்படுத்த முயல்பவர்களை உளவு அமைப்புகளே கண்டறிய உதவும்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ மற்றும் சிஏஐ உலகளவில் புகழ்பெற்றவை. அதேபோல நமது நாட்டிலும் சிபிஐ, ரா ஆகிய உளவு அமைப்புகள் உள்ளன. இதற்கிடையே சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் உளவு அமைப்பு தலைவர்கள் மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

சீக்ரெட் கூட்டம்: சிங்கப்பூரில் நடந்த இந்தக் கூட்டத்தில் உலகின் 20 முக்கிய புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் சீக்ரெட்டாக சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இப்படியொரு கூட்டம் நடந்தது உண்மை தான் என்று இது குறித்து விவரம் அறிந்தவர்கள் ராய்ட்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற கூட்டங்களைக் கடந்த காலங்களிலும் சிங்கப்பூர் அரசு நடத்தியுள்ளது. இவை பொதுவாகத் தனிப்பட்ட ஒரு இடத்தில் நடத்தப்படும் என்றே அவர்கள் தெரிவித்தனர். கடந்த காலங்களிலும் இந்த கூட்டம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியானது இல்லை.
முக்கிய நாடுகள்: அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே இப்போது மோதல் நிலவும் போதிலும் இரு நாடுகளின் உளவு அமைப்புகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்கத் தேசிய புலனாய்வு இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தியா சார்பில் ரா அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் இதில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகையில், "சர்வதேச அளவில் இந்த கூட்டம் ரொம்பவே முக்கியமானது. இதில் பல முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். இது வர்த்தகம் குறித்தெல்லாம் பேசும் கூட்டம் இல்லை. உளவு பார்க்கும் விவகாரத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் வழி இது.
உளவு அமைப்புகளுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இரு நாடுகளின் பிரதிநிதிகள் வெளிப்படையான சந்திக்கும் போது, பல விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. இதன் காரணமாகவே இது போன்ற சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. சிங்கப்பூர் இந்த சந்திப்புகளை ஊக்குவிப்பது நல்ல விஷயம்" என்றனர்.

எந்த தகவலும் இல்லை: இந்தச் சந்திப்பு மிகவும் ரகசியமாகவே நடந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குக் கூட இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லையாம். அந்தளவுக்கு ரகசியமாகவே நடந்துள்ளது. இந்தியா, சீனா என எந்தவொரு நாடும் அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பொதுவாக அமெரிக்கா பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் Five Eyes network என்று அழைக்கப்படும். உளவு பார்ப்பதில் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த நாடுகள் தாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும். இதன் அதிகாரிகள் அடிக்கடி சந்திப்பார்கள். ஆனால், இது தவிரப் பல நாடுகள் பங்கேற்கும் சந்திப்புகள் அரிதாகவே நடக்கும். எப்போதும் அது குறித்து வெளிப்படையாக இருக்காது.
இதில் ஆலோசிக்கப்பட்ட சில விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் போர் மற்றும் நாடு கடத்தக் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஷ்யாவில் இருந்து எந்தவொரு பிரதிநிதியும் பங்கேற்கவில்லை. இந்த சீக்ரெட் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்ததாகவும் மோதல்கள் எதுவும் இதில் எழவில்லை என்றும் தெரிவித்தனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications