சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோரண்டைன் கிடையாது... 11 நாடுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த சிங்கப்பூர்.. லிஸ்டில் இந்தியா இல்லை..!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு கோரண்டைன் கிடையாது என அந்நாட்டு பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் ஒத்திசைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், சிங்கப்பூரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார்.

Singapore to permit quarantine free travel for 11 countries

இதனிடையே கோரண்டைன் வைக்கமாட்டோம் எங்கள் நாட்டுக்கு வருகை தரலாம் என சிங்கப்பூர் விரித்த சிவப்பு கம்பளம் விரித்த 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தியாவில் இன்னும் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராததும், முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையாததாலும் லிஸ்டில் இந்தியா பெயர் இடம்பெறவில்லை.

அதேவேளையில், இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கனடா என 11 நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வந்தால் தனிமைப் படுத்தப்படமாட்டார்கள். இந்த நடைமுறை வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதேபோல் நவம்பர் 15-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தென் கொரிய பயணிகளும் தாராளமாக சிங்கப்பூருக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. VTL எனப்படும் வேக்சினேடட் டிராவல் லேன் என்ற பெயரில் இதற்காக சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு.

இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு எள்ளளவும் தளர்த்தவில்லை. ஆசிய கண்டத்தில் புருனே நாட்டினருக்கும் மட்டும் கோரண்டைன் ஃபிரீ அனுமதியை சிங்கப்பூர் அரசு அளித்திருக்கிறது.

சின்னஞ்சிறிய எழில் நாடான சிங்கப்பூரில் உலகனின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. சுற்றுலாத்துறை மூலம் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டி வந்த சிங்கப்பூர், கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக வளர்ச்சிப் பாதையிலிருந்து பின் தங்கியுள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன நல்ல செய்தி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை..3 நாட்களுக்கு நீடிக்கும் - வானிலை சொன்ன நல்ல செய்தி

இதனால் இனியும் இதில் பொறுமைக்காக்க வேண்டாம் என எண்ணிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்க், கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை புதிய இயல்பு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து தான் அதிகளவில் சிங்கப்பூருக்கு பயணிகள் வருவர். நூற்றில் 43% பேர் இந்த 3 நாடுகளிலிருந்து தான் 2019-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

English summary
Singapore allow quarantine free travel for 11 countries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X