சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூர்வாசிகளே குழந்தை பெத்துக்கோங்க.. செலவை அரசே ஏற்கிறதாம்!

Google Oneindia Tamil News

டிஜிபோட்டி: கொரோனா காலத்தில் சிங்கப்பூர் குடிமகன்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் பொருளாதாரம் வெகுவாக குறைந்துவிட்டது. பணி நீக்கம், ஆட்கள் குறைப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இதனால் பலர் குழந்தை பெற்றுக் கொள்வதை கூட தள்ளிவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போன்ற முடிவை சிங்கப்பூரில் குடிமக்களும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5ல் 4 பேருக்கு நரம்பு பாதிப்பு...புதிய ஆய்வில் தகவல்!!

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

உலகிலேயே மிக குறைந்த அளவிலான பிறப்பு விகிதம் கொண்ட நாடு சிங்கப்பூர் ஆகும். குழந்தை பிறப்பு விகிதம் 1.12 சதவீதம் ஆகும். இதை அதிகரிக்க கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அரசு முயற்சித்து வருகிறது.

குழந்தை பிறப்பு

குழந்தை பிறப்பு

இதற்காக பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் குழந்தை பிறப்பை தள்ளி போடுவது என குடிமக்கள் முடிவு செய்திருப்பதால் பிறப்பு விகிதம் மேலும் குறைந்துவிடும் என அரசு கருதியது.

வருமானம்

வருமானம்

இதையடுத்து சிங்கப்பூரின் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் கூறுகையில் கொரோனாவால் தாய்மை அடைவதை பெற்றோர்கள் தள்ளி வைத்துள்ளார்கள். இதை அரசு புரிந்து கொள்கிறது. வருமானமே நிரந்தரம் இல்லாத நிலையில் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது?

பணம்

பணம்

எனவே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக நிதியுதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என அவர் அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்பால் குடிமக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

English summary
Singapore will pay citizens to have a baby birth during this coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X