Bus accident: சிவகங்கை கோர விபத்து! நேருக்கு நேர் இரு பேருந்துகளும் மோதிக் கொள்ள என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 11 பேர் பலியான சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். இந்த விபத்தில் இரு பேருந்துகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், கும்பங்குடி பாலம் அருகே காரைக்குடி நோக்கி அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அது போல் மதுரை நோக்கியும் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.

sivagangai crime accident

இந்த விபத்தில் 9 பெண்கள், ஒரு பேருந்து டிரைவர் உள்பட 11 பேர் பலியாகிவிட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை அருகில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் காயமடைந்தவர்களில் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. உயிரிழந்த 11 பேரில் 4 பெண்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் மேலும் 4 பேரின் சடலங்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும் மூன்று பேரின் சடலங்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்ட இடத்தில் கண்ணாடி துண்டுகள் கொட்டி கிடந்தன. அவற்றை போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்துக்காக 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.

காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அது போல் சம்பவ இடத்தில் சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் காரைக்குடி சட்டசபை உறுப்பினர் மாங்குடியும் சம்பவ இடத்தில் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த விபத்துகள் தொடர்பாக அவசர தகவல்களை பெற 04575-246233 என்ற அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேருந்து விபத்து நடந்த பகுதி குறுகிய சாலை என்பதாலும் இரு பேருந்துகளுமே வேகமாக வந்ததாகவும் சில பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள். எனினும் இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி அருகே இடைக்கால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சோகம் மறைவதற்குள் சிவகங்கையில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை விபத்து நடந்த போது அங்கு இளைஞர்களும் தன்னார்வலர்களும் உடனடியாக துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டதால் உயிரிழப்பு அதிகரிப்பு தடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+