"மேடம்கள்" செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அதுவும் பஸ் ஸ்டாண்டிலேயே.. கொந்தளித்த பொதுமக்கள்
அரசு பஸ்ஸில் நகை திருடிய 3 பெண்கள் கைதானார்கள்
சிவகங்கை: பட்டப்பகலிலேயே 3 பெண்களும் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார்கள்.. அதுவும் பஸ் ஸ்டாண்டிலேயே..!
சமீப காலமாக சிவகங்கை மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம், ஒக்கூரில் பூட்டியிருந்த கிளினீக்கை உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ளனர்.. கிளினீக்கில் இருந்த ஃபேனை கூட கழட்டி கொண்டு போயுள்ளனர்.. இது தொடர்பாக ஒருவர் மட்டும் இப்போதைக்கு கைதாகி இருக்கிறார்.. மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.

செக்போஸ்ட்
அதேபோல, எஸ்எஸ் கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள செக்போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வந்த குளத்துப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் பாரதிராஜா என்ற 20 வயது இளைஞர் வந்தார்.. அவரிடம் போலீசார் வழக்கமான விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஒரு சங்கிலி திருடன் என்பது தெரியவந்தது..

உதவி
இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் இந்த திருட்டுகளுக்கு எல்லாம் உதவி உள்ளார்.. யதேச்சையாக போலீசார் விசாரிக்கும்போது அவர் பாக்கெட்டில் 10 பவுன் நகைகள் இருந்திருக்கிறது.. எங்கேயோ திருடிவிட்டு அந்த வழியாக அப்போது வந்து கொண்டிருந்தபோதுதான் வசமாக சிக்கி உள்ளார்... இதேபோல இன்னொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. அதில் 3 பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்..

சாந்தி - மாரி
இளையான்குடி அருகே அம்முகுடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி... இளையாங்குடி வருவதற்காக பரமக்குடியில் இருந்து தாயமங்கலம் வழி செல்லும் அரசு பஸ்ஸில் வந்திருக்கிறார். செல்வி, சாந்தி, மாரி ஆகிய 3 பேரும், வள்ளியை ஃபாலோ செய்து கொண்டே வந்துள்ளனர்,.. இவர்கள் 3 பேருமே திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்.. இதில், சாந்தியும் மாரியும் அக்கா தங்கைகள் ஆவர்..

திருட்டு
3 பேருமே வள்ளி ஏறிய அதே பஸ்ஸில் ஏறி கொண்டனர்.. இளையாங்குடி பஸ் ஸ்டாண்டில் வள்ளி இறங்க முயன்றார்.. அப்போது 3 பெண்களும், கீழே இறங்குவதுபோல வந்து வள்ளி பக்கத்தில் நின்று கொண்டனர்.. பிறகு திடீரென வள்ளியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை திருட முயற்சித்துள்ளனர். பஸ் படிக்கட்டில் இந்த சம்பவம் நடந்ததால், அந்த பஸ்ஸில் இருந்த கண்டக்டர் இதை பார்த்துவிட்டு கூச்சல் போட்டார்..

கைது
உடனே பஸ் ஸ்டாண்டில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் சேர்ந்து, 3 பெண்களையும் சுற்றி வளைத்தனர்.. இளையாங்குடி போலீஸ் ஸ்டேஷனிலும் ஒப்படைத்தனர்... பட்டப்பகலில், அரசு பஸ்ஸில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இந்த 3 பெண்களும் எங்கெல்லாம் திருடியிருக்கிறார்கள்? என்பது குறித்த விசாரணையை இளையான்குடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications