சிவகங்கையில் அதிர்ச்சி.. குவாரி விபத்தில் வடமாநில தொழிலாளர் உட்பட 5 பேர் மரணம்.. என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேகா மெட்டல் குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 5 பேரில் ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்எஸ் கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தினக்கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். இந்த குவாரியில் சுமார் 450 அடி ஆழம் கொண்ட குவாரி இயங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த குவாரியில் இருந்து வெட்டப்படும் கற்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் கற்கள் ஆகியவற்றை கொண்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.
இதன்பின் வெடி பயங்கர சத்தத்துடன் வெடிக்க, திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் சிக்கி வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதைந்திருக்கின்றனர். இதன்பின் மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை உடனடியாக மீட்க சக தொழிலாளர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விசாரணையில் குவாரியில் பணியாற்றிய அர்ஜித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம் மற்றும் முருகானந்தம் ஆகிய 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இந்த குவாரிக்கு முறையான அனுமதி பெறப்பட்டு புதுப்பிக்கப்ப்ட்டு வருகிறதா? அனைத்து வகையான விதிகளும் பின்பற்றப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்று விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த அர்ஜித் என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications