அப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு!
சிவகங்கை அருகே நடைபெற்ற கோயில் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்
சிவகங்கை: "அய்யனாருக்கு வருஷா வருஷம் திருவிழா நடத்தினாதானே மழையை வரவழைக்க முடியும்.. வர்ற தண்ணியை வீணாக்காமல் இளைஞர்கள் அதை சேமித்து வைக்கணும்" என்று நடிகர் வடிவேலு கோயில் விழாவில் பேசி உள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்து கொண்டிருந்தவர் வடிவேலு. அப்போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இந்நிலையில் சில வருஷங்களாகவே சினிமாவில் வடிவேலுவை பார்க்க முடியாத நிலை உள்ளது.
தேர்தல் சமயத்தில் வந்து ஓட்டு போட்டார், கூடவே ஒரு டான்ஸையும் போட்டுவிட்டு போய்விட்டார். அதற்கு பிறகு இப்போது திடீரென ஒரு மேடை நாடகத்தில் தோன்றி உள்ளார். இந்த நாடகம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கலியாந்தூர் கிராமத்தில் நடந்தது. இது அவரது மனைவியின் சொந்த ஊர்.

அய்யனார்
இந்த ஊரில் உள்ள அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார். இப்படி அய்யனாருக்கு விழா எடுத்தால் மழை பெய்யும் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. இந்த விழாவின் ஒரு பகுதியாக வள்ளி திருமணம் நடந்தது.

குத்தாட்டம்
இதனை வடிவேலு தொடங்கி வைத்தார். அப்போது மேடையிலேயே ஒரு குத்தாட்டம் போடவும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பிறகு, ஒரு பாட்டு பாட சொல்லவும். ‘எட்டணா இருந்தால்' பாடலை முழுசுமாக பாடி முடித்தார்.

இளைஞர்கள்
அப்போது பேசிய வடிவேலு, "கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான். இப்படி விழாவில கலந்துக்கிறது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? அய்யனாருக்கு அடிக்கடி இப்படி திருவிழா எடுத்து, மழையை வரவழைக்க வேண்டும். இல்லேன்னா இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியாமலேயே போய்விடும்.

விழாக்கோலம்
கிராமத்தினுடைய பண்பாடுதான் உலகத்துக்கே உதாரணமா இருக்கு. இப்போ எல்லா இடங்களிலும் தண்ணி பிரச்சனை இருக்கு. அதனால் மழை நீரை வீணாக்காமல் இளைஞர்கள் சேமித்து வைக்க முன் வரவேண்டும்" என்றார். வடிவேலு வருகையையொட்டி கலியாந்தூர் கிராமம் மட்டுமல்லாமல் சுத்துப் பட்டு கிராமங்களும் விழாக் கோலம் பூண்டு அத்தனை பேரும் வடிவேலுவைக் காண ஓடோடி வந்து விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications