அமைச்சர் பெரியகருப்பன் தொகுதியில் போட்டியிட ஆள் இல்லையா? போட்டியின்றி ஜெயித்த அதிமுக வேட்பாளர்!
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்பத்தூரில் உள்ள ஒரு பேரூராட்சியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார் அதிமுக வேட்பாளர் தெய்வானை.
திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பள்ளத்தூர் பேரூராட்சியில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
இதனால் ஆளுங்கட்சியான திமுகவில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட ஆள் இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பல இடங்களில் போட்டியின்றி பலர் கவுன்சிலர்களாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளரை தவிர திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

வெற்றி உறுதி
இதனால் அதிமுக பெண் வேட்பாளர் தெய்வானையின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது எதிர்கோஷ்டியினர் திமுக தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கூட வேட்பாளரை நிறுத்துவதில் கோட்டை விட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

பேச்சுவார்த்தை
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடப்பங்கீட்டை சுமூகமாக முடிப்பதற்கே அமைச்சர் பெரியகருப்பனுக்கு நேரம் போதவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யாததன் காரணம் குறித்த விவரம் எதுவும் இல்லை.

அதிமுக தரப்பு
இதனிடையே சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் அதிமுக பெண் வேட்பாளர் தெய்வானை போட்டியின்றி தேர்வாவதை, அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி என்பதால் இது அக்கட்சி தலைமையின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications