அஜித்குமார் கொலை வழக்கு.. காவல்துறை வாகன டிரைவர் 6வது நபராக கைது.. அதிரடி காட்டிய சிபிஐ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமாரை நகை திருட்டு குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கினர். இதில் அவர் இறந்தார். அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டையே இந்த உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 வது நபராக போலீஸ் வாகன டிரைவரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித் குமார். இவருக்கு வயது 27.

கடந்த ஜூன் 27 ம் தேதி சிவகாமி என்பவர் தனது மகள் நிகிதாவுடன் காரில் கோவிலுக்கு வந்தார். சிவகாமியால் நடக்க முடியாது. இதனால் அவருக்கு வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வேளையில் அஜித் குமாரிடம் கார் பார்க் செய்யும்படி சாவியை கொடுத்து சென்றார். அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது. இதனால் அவர் இன்னொருவரை உதவிக்கு அழைத்து காரை பார்க் செய்துவிட்டு சாவியை ஒப்படைத்தார்.இந்த வேளையில் காரில் இருந்த 9.5 சவரன் நகை மற்றும் ரூ.2,500 காணவில்லை என்று நிகிதா கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அஜித் குமாரை பிடித்து விசாரித்தனர். எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை தனிப்படை போலீசார் கோவிலின் மாட்டு தொழுவத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் இறந்தார். மொத்தம் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.
போலீசாரின் தனிப்படை பிரிவில் பணியாற்றிய ஐந்து காவலர்களான கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் அவ்வப்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் 6வது நபராக காவல்துறை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அஜித்குமார் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிபிஐ அவரை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications