பள்ளி மாணவிக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த மேனேஜர் - அடி வெளுத்த மக்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேனேஜரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து துவைத்துள்ளனர். காரைக்குடியில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
காரைக்குடி: மூன்று வயது சிறுமி முதல் 60 வயது பாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி வீட்டிற்கு போனால் பாலியல் தொல்லை கொடுத்து பதைபதைக்க வைக்கின்றனர். காரைக்குடியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாடத்தில் சந்தேகம் கேட்கப் போன இடத்தில் கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார் 55 வயதான வங்கி மேனேஜர். உறவினர்களிடம் சிறுமி புகார் அளிக்கவே அந்த நபரை தர்ம அடி கொடுத்து வெளுத்துள்ளனர்.
அடிவாங்கிய நபரின் பெயர் ரவிச்சந்திரன் என்பதாகும். 55 வயதாகும் ரவிச்சந்திரன் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் வசித்து வருகிறார். மானகிரியில் ஐஓபி வங்கியில் மேலாளராகவும் இருக்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது மாணவி ரவிச்சந்திரனிடம் சகஜமாக பேசுவாராம். பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதால் வழக்கம் போல ரவிச்சந்திரன் வீட்டிற்கு பாடத்தில் சந்தேகம் கேட்க சென்றிருக்கிறார்.

அப்போது திடீரென ரவிச்சந்திரன் மாணவியை தவறான நோக்கத்தோடு தொட்டிருக்கிறார். கட்டிப்பிடித்த அவர், ஆடைகளை களைத்து போட்டு நிர்வாண நிலையில் நின்றிருக்கிறார். பயந்து போன அந்த சிறுமி ரவிச்சந்திரனை தள்ளி விட்டு விட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினரிடம் போய் அழுது கொண்டே கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், ரவிச்சந்திரனை அடித்து துவைத்து காரைக்குடி மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவிச்சந்திரனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மூவரும் சென்னையில் வசித்து வரும் நிலையில் தனிமையில் தங்கி வேலை பார்த்து வந்த ரவிச்சந்திரன் தனது மகள் வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications