நடிகர் சரத்குமார் பயணித்த கேரவன் திரும்பிச் செல்லும்போது விபத்தில் சிக்கியது.. 13 பேர் காயம்!
சிவகங்கை: நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் பயணித்த கேரவன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பகுதியில் உள்ள மேலும் சில கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார் சரத் குமார். அவரை அழைத்து வருவதற்காக கேரவன் வரவழைக்கப்பட்டிருந்தது. இதில் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட சிலர் பயணித்தனர்.

சரத்குமார் உள்ளிட்டோர் கோயிலுக்கு வந்த பின்னர், அவர்கள் பயணித்த அந்த கேரவன் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்தின் மீது மோதி அந்த கேரவன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த 13 பேர் காயமடைந்தனர்.
பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து, கேரவன் ஒன்றோடு ஒன்று மோதியதில் பேருந்தில் இருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர். கேரவனில் ஒருவருக்கு லேசான காயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பின்பு காயமடைந்த அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications