தமிழரின் பெருமையை மீட்ட ஒற்றைப்பெண்.. யார் இந்த கனிமொழி மதி? கீழடி வரலாற்றை காத்தது எப்படி?
கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று ஆதாரங்கள் கீழடியில் கிடைத்து உள்ளன.
சிவகங்கை: கீழடியில் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இங்கே ஆய்வு நடத்த முக்கிய காரணமாக அமைந்த வழக்கறிஞர் கனிமொழி மதி தற்போது இணையம் முழுக்க கவனம் பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் கிமு 6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு 2014ல் மத்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பெங்களூரில் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரின் திட்டத்தின் காரணமாகவே கீழடியில் ஆய்வுகள் செய்யப்பட்டது.

அருங்காட்சியகம்
கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று ஆதாரங்கள் கீழடியில் கிடைத்து உள்ளன. இந்த கீழடி கண்டுபிடிப்புகளை வைத்து அந்த பகுதியில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலின் மூலம் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமானம் நிறைவடைந்து திறக்கப்பட்டு உள்ளது. தமிழர் பாரம்பரியத்தில் இந்த வீடுகள் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. இங்கே கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முக்கிய காரணம் அங்கு செய்யப்பட்ட 4ம் கட்ட அகழாய்வுதான்.

4ம் கட்ட அகழாய்வு
இந்த 4ம் கட்ட அகழாய்வு நடக்க முக்கிய காரணமாக இருந்தவர்கள் வழக்கறிஞர் கனிமொழி மதி. இவர் நடத்திய இடையராத சட்ட போராட்டம்தான் கீழடியில் அகழாய்வு நடக்க காரணமாக அமைந்தது. வழக்கறிஞரான இவர் கீழடி தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தினார். இங்கே உடனே 4ம் கட்ட அகழாய்வை தொடங்க வேண்டும். இங்கே மீண்டும் கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணாவை நியமிக்க வேண்டும். இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கைகளை வைத்த இவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில்தான் 4ம் கட்ட அகழாய்வை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு தமிழ்நாடு அரசும் இங்கே இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் விளைவாகவே இங்கே அகழாய்வு நடந்தது.

கனிமொழி மதி
இந்த நிலையில் கனிமொழி மதியின் சட்ட போராட்டத்தை நினைவு கூர்ந்து திமுக அயலக நலப்பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போஸ்ட் செய்துள்ளார். அதில், கீழடி தொடர்பாக நீதியரசர் மகாதேவன் அவர்களின் தீர்ப்பு முக்கியமானது. கீழடியை கண்டறிந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மீண்டும் கீழடிக்கு கொண்டுவரப்படுவதோடு கீழடியை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்பதையும் சுட்டியுள்ளார். கீழடிக் கண்டறிதல்களின் முக்கியத்துவத்தை கமுக்கமாக மூழ்கடிக்க முயலும் மத்திய அரசு மீதான தன் விசனத்தையும் நீதியரசர் மகாதேவன் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். ஒருநாள் கீழடி தமிழரின் பெருமையை உலகப் பரப்பில் நிறுத்தும் எனவும் பகர்ந்துள்ளார் நீதியரசர்.

போராட்டம்
கீழடியானது பண்டைத் தமிழரின் நாகரீகச் செழுமையை, உலகோடான வணிகச் சிறப்பை நிரூபித்து நிறுவும் பெருங்களம். இதனை மறைத்தழிக்க முயல்கிறது மத்திய அரசு. நீதியமைப்பின் ஐயா மகாதேவன் போன்றவர்கள் உண்மையான நீதிக் காவலர்களாய் நின்று உண்மை காக்கிறார்கள். ஆனால் தனியொருத்தியாக இந்த வழக்கினை நீதியவைக்கு எடுத்துச்சென்று, கடந்த மூன்றாண்டுகளாய் மதுரை, சென்னை என சலிப்பின்றி தன் சொந்தச் செலவில் அலைந்து இன்று இத் தீர்ப்பு கிடைத்திட மூல காரணமான நம் எழுமின் குழுவின் வேலுநாச்சியார்- CTACIS தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர், தமிழக பெண்கள் இயக்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள் நிச்சயமாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் பாராட்டுக்கும் வரலாற்று நன்றி நினைவுக்கும் உரியவர். வாழ்த்துகிறோம் வழக்கறிஞரே!, என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications