காரைக்குடி மனோஜின் கதை முடித்த கும்பல்..அக்யூஸ்டை சிக்க வைத்த CCTV.. போலீஸ் வச்சாங்க பாருங்க ஆப்பு.!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நிபந்தனை ஜாமினில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்த ரவுடி மனோஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் குற்றவாளிகளை போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில், மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதற்கிடையே கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 124 கிலோ கஞ்சாவை சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்த மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற மனோஜ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட மனோஜ் சென்றுள்ளார். அவருடன் இருசக்கர வாகனங்களில் சபி, கார்த்திக் ஆகியோரும் சென்றனர்.
டிடி நகர் 5வது தெரு பகுதிக்கு சென்றபோது பின்புறம் காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் அவர்களது இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளியது. இதில் நிலை தடுமாறிய மூவரும் கீழே விழுந்த நிலையில் அந்த கும்பல் அவர்களை வெட்ட முயன்றது. உயிரை காத்துக் கொள்ள மனோஜ் உள்ளிட்டோர் 100 அடி சாலையில் ஓடினர். இருந்தும் விடாமல் துரத்திய அந்த கும்பல் மூவரையும் வெட்டியது. இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த சபி, கார்த்திக் ஆகியோர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகாமல் இருக்க அப்பகுதியை சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்கள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொலை சம்பவத்தை வீடியோ எடுத்திருந்த நிலையில் அவர்களையும் செல்போனையும் வாங்கி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை நிரந்தரமாக அழித்துள்ளனர். இதற்கிடையே கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. இது தொடர்பாக விசாரித்த போது கொலை நடந்த இடத்திற்கு எதிரே இருந்த செருப்பு கடையில் இருந்து சிசிடிவி காட்சிகள் வெளியானது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்த ஹார்ட் டிஸ்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கடையில் உரிமையாளரான ஜாபர் சித்திக் என்பவர் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தங்களது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கடையின் ஊழியர்களான தஞ்சாவூரை சேர்ந்த ரூபேஷ், மன்னார்குடியை சேர்ந்த ஆதவன் ஆகியோர் வெளியிட்டு விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரையும் கைது செய்துள்ளனர்.
-
ஆன்லைன் லிஸ்ட்டில் கரும்பு அவுட்.. சிவகங்கை கூட்டுறவு வங்கி பயிர்க்கடனில் விவசாயிகள் ஷாக்! என்னாச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications