அகம் ஐந்து.. புறம் ஐந்து! பள்ளி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி முகாம்! நிகில் பவுண்டேஷன் புது முயற்சி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நிகில் பவுண்டேஷனின் ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தியாவின் பல முக்கியமான துறைகளில், தலைசிறந்த ஆளுமைகளாக அரசு பள்ளி மாணவர்களே இருக்கின்றனர். இந்த சாதனை மேலும் தொடர வேண்டும் என்கிற நோக்கத்தோடு, மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி முகாம்களை நிகில் பவுண்டேஷன் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில், ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை நிகில் பவுண்டேஷனின் பயிற்சியாளர்கள் துரை கணேசன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் மாணவர்களிடம் பேசுகையில்,
"நேர்மை, அன்பு, பணிவு, இவை மூன்றும் இருந்தால் பாராட்டு தானாக கிடைக்கும். சிறு உதவி செய்தாலும் நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அம்மா அப்பாவை எப்பொழுதுமே பாராட்ட வேண்டும். ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை நாம் கவனித்தால் 30% நமக்குள் அந்த தகவல் போய் சேரும். வீட்டில் சென்று படித்தால் 30% மீண்டும் நம்முள் சேரும். அதனை எழுதிப் பார்த்தால் 60 சதவிகிதம் நம்முள் சென்று சேரும்.

வீட்டைச் சுற்றியும், நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் பாடங்களை நன்றாக கவனித்தால் டியூசன் தேவையில்லை. ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் எண்ணம், செயல், சொல் சிறப்பாக இருக்கும்.
நமக்குள் எண்ணங்கள் 60 ஆயிரம் உண்டு. எனவே நம்முடைய வாழ்க்கையில் நாம் நன்றி பாராட்டுதலையும், கவனித்தலையும் மேற்கொண்டால் வெற்றி எளிதாகக் கிடைக்கும்" என பயிற்சியாளர்கள் பாராட்டுதல், கவனித்தல் தொடர்பாக விரிவாக விளக்கினார். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார். பயிற்சியில் ஏராளமான பெற்றோர்களும் பங்குபெற்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications