கதறும் அஜித் குமார் குடும்பம்! ஹாயாக காபி சாப்பிட்ட நிகிதா! சிக்கியது முக்கிய ஆடியோ!
சிவகங்கை: திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கில், நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதாவிடம் இன்று விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய ஆடியோவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் மீது நகை திருட்டுப் புகார் அளித்தவர் நிகிதா. இவர் மீது ஏற்கெனவே பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவரான திருமாறனையும் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து திருமாறன் அளித்த பேட்டியில், நிகிதா தன்னைத் திருமணம் செய்துகொண்டு ஒரே நாளில் ஓடிவிட்டதாகவும், பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், திருமணம் செய்துகொண்டு வரதட்சணை புகார் அளித்து மிரட்டி பணம் பறிப்பது நிகிதாவின் வழக்கம் என்றும், அவரது குடும்பமே ஒரு மோசடி கும்பல் என்றும் திருமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
நிகிதா தலைமறைவு
இந்த நிலையில், நிகிதா தற்போது தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவர் மீது பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்படுவதால், போலீஸாரிடம் சிக்காமல் இருக்க அவர் ஊர் ஊராகச் சுற்றி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிகாரத்தில் இருப்போர்
நிகிதாவுக்கு அதிகாரத்தில் இருப்போர் பலரைத் தெரியும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால், ஏற்கெனவே மோசடிப் பேர்வழியான நிகிதா, நகையே இல்லாமல் அஜித் மீது புகார் கூறி, அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயன்றிருக்கலாம் என்றும் பல பத்திரிகையாளர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
5 தனிப்படை போலீஸார்
இந்த நிலையில், நிகிதா, அந்த ஐந்து தனிப்படை போலீஸாரிடம் பேசிய ஆடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இன்றும் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்.
நிகிதா சிக்கினாரா
இந்த நிலையில் அஜித் மீது நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதாவிடம் திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊர் ஊராக சுற்றி வரும் நிகிதா, சிக்கினாரா இல்லை தானாக சரணடைந்தாரா என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
நடந்தது என்ன
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு "லாக்-அப் மரணம்" என பரவலாகக் குறிப்பிடப்பட்டு, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
எப்போது நடந்தது
கடந்த ஜூன் 28 அன்று, நிகிதா என்ற பெண்மணி தனது 10 பவுன் நகைகள் காணாமல் போனதாகக் கூறி, கோயிலின் தற்காலிக காவலாளியான 27 வயது அஜித் குமார் மீது சந்தேகம் தெரிவித்து புகார் அளித்தார்.
முதல் தகவல் அறிக்கை என்னாச்சு
நிகிதாவின் புகாரின் பேரில், திருப்புவனம் தனிப்படை போலீஸார் அஜித் குமாரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இந்தப் புகாரின் மீது எந்த ஒரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படாமலேயே அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வழக்கில் திருப்பம்
இந்த நிலையில் அஜித் குமாரை போலீஸார் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ அஜித் குமார் மரண வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்த வீடியோவை எடுத்த அஜித் குமாரின் நண்பர் சத்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications