Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் அடியே சறுக்கல்.. ஓபிஎஸ்ஸுக்கு 'ரெட்' சிக்னல்.. எடப்பாடிக்கு பச்சைக்கொடி.. ஷாக் ஆன நிர்வாகிகள்!

எடப்பாடி பழனிசாமிக்கு பச்சைக்கொடி காட்டிய சிவகங்கை டி.எஸ்.பி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரெட் சிக்னல் போட்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டமும், ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஈபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவை சிவகங்கை எஸ்.பி எடுத்திருப்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம், இந்த விஷயத்திலும் ஈபிஎஸ்ஸிடம் தோல்வியுற்றிருப்பதை ஈபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

ஈபிஎஸ் அணி மா.செ

ஈபிஎஸ் அணி மா.செ

சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் மார்ச் 11ஆம் தேதி தனியார் இடத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் அதிமுக பொதுக்கூட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கக் கோரி சிவகங்கை எம்.எல்.ஏவும், அதிமுக மாவட்ட செயலாளருமான பி.ஆர்.செந்தில்நாதன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மார்ச் 11ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் தனியார் நிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் அதிமுக பொதுக்கூட்டம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடத்த உள்ளோம். இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

ஓபிஎஸ் அணி மா.செ

ஓபிஎஸ் அணி மா.செ


இதேபோல் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மார்ச் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஓபிஎஸ் அணியின் சிவகங்கை மாவட்ட செயலாளருமான கே.ஆர்.அசோகன் வழக்கு தொடர்நதார். அதில், "முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளர், கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு கட்சியில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மார்ச் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

அரசு தரப்பு

அரசு தரப்பு

ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டமும், ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதால், மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி அதிர்ந்து போனார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்வு அன்று அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. எனவே, வழக்கு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல்

எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல்

இதையடுத்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மனுதாரர்களின் இரண்டு மனுக்களையும் சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மாலை 6 மணிக்குள் பரிசீலனை செய்து சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த இரண்டு மனுக்களையும் சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து, எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்கிறார்.

 ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுப்பு

ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுப்பு

ஒரே நாளில் இரு தரப்பினரும் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஒரே பகுதியில் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, அதனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றொரு நாளில் போராட்டத்திற்கு அனுமதி கோரும் பட்சத்தில் பரிசீலனை செய்யப்படும். இந்த உத்தரவை மீறினால் கட்சி நிர்வாகிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார் சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.

வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. இப்படி அடுத்தடுத்து ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான நிகழ்வுகள் நடந்து அவரது தரப்பு பலம் பெற்றிருக்கிறது. இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள சிவகங்கை டிஎஸ்பி, ஓபிஎஸ் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

முதல் அடியே

முதல் அடியே

அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் தரப்பு சட்டப் போராட்டங்களையே நம்பி வந்தது. பெரிய அளவில் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. இனிமேல் தான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளனர். இந்தச் சூழலில், எடப்பாடி சிவகங்கையில் பொதுக்கூட்டம் நடத்தும் அதே நாளில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக அப்செட் ஆகியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+