வேறு ஆட்டோவை திருடி அதில் உள்ள என்ஜினை தன் வண்டியில் பொருத்திய டிரைவர்... சிக்க வைத்த சின்ன விஷயம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், வேறு ஆட்டோவை திருடி அதில் உள்ள என்ஜின், டயர்களை கழற்றி தன் ஆட்டோவில் பொருத்தி இருக்கிறார். இதை எப்படி கண்டுபிடித்தார்கள். சிக்க வைத்த சின்ன விஷயம் குறித்து பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் 53 வயதாகும் அப்பாஸ் என்பவர் தனது ஆட்டோவை சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். இந்நிலையில சில நாட்களுக்கு முன்பு அப்பாஸின் ஆட்டோ திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அப்பாஸ் திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு மூலம் தீவிரமாக விசாரித்தனர்.

இதற்கிடையே திருப்புவனம் பாக்யாநகரில் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமாக நிற்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. அந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அது அப்பாசுக்கு சொந்தமானது என்பதும், அதில் இருந்த என்ஜின் பழுதாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மெக்கானிக் மூலம் அந்த என்ஜினை போலீசார் சோதித்து பார்த்ததுடன், என்ஜின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அந்த என்ஜின் மானாமதுரையைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 42) என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். அப்பாசுக்கு சொந்தமான ஆட்டோவில் ஆனந்தனின் முகவரி கொண்ட என்ஜின் வந்தது எப்படி? போலீசார் சந்தேகம் அடைந்து ஆனந்தனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான் ஆட்டோவை திருடி அதில் உள்ள என்ஜின், டயர்களை கழற்றி தன் ஆட்டோவில் பொருத்தியதை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். ஆனந்த அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ஆனந்தனின் சொந்த ஊர் மானாமதுரையை அடுத்த மேலப்பசலை கிராமம் அ ஆகும். இவர் அங்கு ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சமீப நாட்களாக தனது ஆட்டோவின் என்ஜின் அடிக்கடி பழுதாகி தொல்லை கொடுத்து வந்தததாம். ஆட்டோவில் டயர்களும் தேய்ந்துவிட்டதாம். இதனால் ஆட்டோவில் பல உபகரணங்களை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு செலவு செய்வதற்கான பணம் அவரிடம் இல்லாமல் இருந்திருக்கிறது.
இதனால் திருப்புவனம் பகுதியில் சாலையோரம் நின்ற ஆட்டோவை யாருக்கும் தெரியாமல் திருடி, அதில் இருந்த என்ஜின் மற்றும் தேவையான உபகரணங்களை கழற்றி எடுத்து தனது ஆட்டோவில் பொருத்திவிட்டு, என்னுடைய ஆட்டோவில் பழுதாகி இருந்த என்ஜின், டயர் மற்றும் சில உபகரணங்களை கழற்றி, திருடி வந்த ஆட்டோவில் பொருத்தி அதேபகுதியில் நிறுத்தி இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே தனது ஆட்டோவின் என்ஜின் அப்பாஸ் ஆட்டோவில் பொறுத்தியால் வசமாக சிக்கி உள்ளார். இதையடுத்து ஆனந்தனையும், அவருக்கு சொந்தமான ஆட்டோவையும், திருட்டு போன ஆட்டோவையும் திருப்புவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். திருடிய ஆட்டோ டிரைவர் ஆனந்தனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications