"அபியும் நானும்".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்
டிக் டாக் இளம்பெண் வினிதா காப்பகத்தில் இருந்து மாயமாகி விட்டாராம்
Recommended Video
தேவக்கோட்டை: வாயை திறந்தாலே பொய் பொய்யா அவிழ்த்துவிட்ட டிக்டாக் வினிதா, இப்போது தங்க வைக்கப்பட்டிருந்த லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தே மாயமாகிவிட்டாராம்.
திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் பெண் தோழி அபியுடன் பழகக்கூடாது, அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என்று வினிதாவின் கணவர், தாயார் அட்வைஸ் செய்தனர்.
ஆனாலும் வீட்டிலிருந்து 20 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, திரும்பவும் அபியிடமே வந்து தந்து, அவருடனே ஓடிவிட்டார் வினிதா.

20 பவுன் நகை
இறுதியில் போலீசார் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், தேவக்கோட்டை ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். இதனால் கடந்த 2 தினங்களாக இவரிடம் மகளிர் போலீசார் ஸ்பெஷல் கேர் எடுத்தே விசாரித்தனர். அப்போதுதான், அபியுடன் ஓடியதையும், 20 சவரன் நகையை தந்ததையும், ஸ்டேஷன் வாசல் வரை வந்த தோழிகள் அபியும், சரண்யாவும், உள்ளே வராமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறினர்.

தனிப்படை
இதையடுத்து போலீசார், அபி, சரண்யாவை செல்போனில் பேசி, தேவக்கோட்டைக்கு விசாரணைக்கு வரும்படி சொன்னார்கள். ஆனால் 2 பேருமே வரவில்லை. அதனால், அவர்களை கைது செய்து விசாரிக்க தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு விரைந்தனர்.

மறுப்பு
இதனிடையே, விசாரணை முடியும்வரை, வினிதாவை, தாய், அல்லது கணவனுடன் செல்லுமாறு போலீசார் சொன்னார்கள். ஆனால், இருவருடனும் போக வினிதா மறுத்துவிட்டார். இதனால், தற்சமயம், காரைக்குடியில் உள்ள மகளிர் ஹாஸ்டலில் தங்க வைத்தனர்.

ஹாஸ்டல்
ஆனால் அங்கிருந்து வினிதா எஸ்கேப் ஆகி உள்ளார். எங்கே போனார் என்றும் தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஸ்டல் நிர்வாகம் சார்பில், இது சம்பந்தமாக வடக்கு ஸ்டேஷல் புகார் தரப்பட்டதையடுத்து, இப்போது வினிதாவை தேடும்பணி நடக்கிறது. இந்த 3 பெண்களையும் ஒன்றாக உட்கார வைத்து பேசி, விசாரணை நடத்தினால்தான் நிஜமான சமாச்சாரங்கள் தெரியவரும் என நம்பப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications