ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. இன்ஸ்டாகிராம் காதலுக்காக கணவனை உதறிய பெண்.. கிணற்றில் பிணமாக வீசிய காதலன்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பெண் ஒருவர் அவரின் இன்ஸ்டாகிராம் காதலனால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோதினி. அங்கே உள்ள இருவாணி வயல் என்ற கிராமத்தில் இவர் வசித்து வந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். முக்கியமாக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்டுகளை போட கூடியவர்.

அடிக்கடி ரீல்ஸ், வீடியோக்கள் போடுவதை இவர் வழக்கமாக வைத்து இருந்தார். 19 வயதே ஆன இவர் நீண்ட காலமாக மனோரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸுக்கு கமெண்ட் செய்து இவர்கள் காதலர்களாக மாறி உள்ளனர்.
அதன்பின் போன் நம்பரை பகிர்ந்து இரண்டு பேரும் பேசி நெருக்கமாகி உள்ளனர். அடிக்கடி இவர்கள் சந்தித்து காதலில் லயித்து உள்ளனர். வினோதினி அந்த இளைஞரின் பெயரை தனது நெஞ்சில் பச்சை குத்தும் அளவிற்கு அந்த இளைஞரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார் . ஆனால் இந்த காதலை வினோதினி பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் வினோதினிக்கு பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதையடுத்து திருமணத்தை நிறுத்த வினோதினி கடுமையாக முயன்றுள்ளார் . ஆனால் அவரின் பெற்றோர் வினோதினிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் வினோதினி திருமணம் காரணமாக மனோரஞ்சித் கடுமையாக கோபம் அடைந்துள்ளார். அதேபோல் கடுமையாக வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார். முக்கியமாக வினோதினியை மறக்க முடியாமல், அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கும் முயன்று உள்ளார். ஆனால் மனோரஞ்சித் மரணம் அடையவில்லை.
வினோதினிக்கு திருமணம் நடந்தாலும் கூட மனோரஞ்சித் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர்கள் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இது இரண்டு வீட்டிற்கும் தெரிந்து பெரிய பிரச்சனை ஆகி உள்ளது.
எங்கே சென்றார்? : இதையடுத்து வினோதினி ஒரு கட்டத்தில் காதலனை மறக்க முடியாமல் நேரடியாக மனோரஞ்சித்தை சந்திக்க சென்றுள்ளார். அவரின் ஊருக்கே சென்றுள்ளார். கடையநல்லூர் பகுதியில் இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்தும் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில்தான் இருவரும் ஒன்றாக தங்க தொடங்கிய பின்பு அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. வினோதினி திருமணம் செய்ததை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சண்டை வரும் போதெல்லாம்.. நீ ஏன் கல்யாணம் செய்தாய் என்று கூறி மாறி மாறி திட்டி உள்ளார்.
இந்த நிலையில்தான் ஒருநாள் வினோதினி போனை எடுத்து பார்த்த மனோரஞ்சித்.. அந்த போனில் இன்ஸ்டாகிராம் மூலம் வேறு இளைஞர்களிடம் அவர் பேசிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த மனோரஞ்சித் விநோதினியை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இளைஞர்கள்: இதையடுத்து நண்பர்களின் உதவியுடன் விநோதினியை காட்டிற்கு தூக்கி சென்று அங்கேயே கொலை செய்து கிணற்றில் வீசி உள்னனர். இதையடுத்து வினோதினி பெற்றோர், நண்பர்கள் கொடுத்த புகாரின் கீழ் மனோரஞ்சித்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் வினோதினி கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்து அவரின் உடலை மீட்டனர். இதையடுத்து விசாரணை முடிவில், மனோரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் மகா பிரபு, பரத், மற்றும் மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications