Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசியில் கருகும் உயிர்கள்.. 2012ல் முதலிப்பட்டி.. 2023ல் ரெங்கபாளையம்.. நிரந்தர தீர்வு எப்போது?

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: குட்டி ஜ‌ப்பா‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்ப‌டு‌ம் ‌சிவகா‌சி‌யி‌ல் ப‌ட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் பல தொழிலாளர்களின் உயிர்கள் கருகிப்போகின்றன. 2012ஆம் ஆண்டு முதலிப்பட்டி பட்டாசு விபத்து தொடங்கி 2023 அக்டோபர் ரெங்கபாளையம் விபத்து வரை பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. சிவகாசி பட்டாசு ஆலைகளில் நிகழும் உயிர்பலியை தடுக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிவகாசி: வானில் வண்ண வண்ண ஒளிச்சிதறல்களை காட்டி வான வேடிக்கை நிகழ்த்தும் பட்டாசு அனைவரையும் குதூகலப்படுத்தும். அந்த பட்டாசுகளையும், வண்ண வண்ண மத்தாப்புகளையும் உயிரை பணயம் வைத்து உற்பத்தி செய்யும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருளடைந்து வருகிறது.

Sirvakasi Crakers factory blast: Sivakasi workers life darkness What is the permanent solution?

குட்டி ஜப்பான்: தமிழகத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை சக்கரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிவகாசியில் 700க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பட்டாசு ஆலைகளில் உயிர்களை பணயம் வைத்துதான் பணியாற்றுகின்றனர் தொழிலாளர்கள்.

கரணம் தப்பினால் மரணம்: பட்டாசுகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தினம் தினம் செத்து பிழைக்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான் இவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு முதலிப்பட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் கருகிப்போயினர். அந்த விபத்து நிகழ்ந்த சில நாட்களில் சோதனைகள், ஆய்வுகள் நடைபெற்றன. அதற்குப்பிறகு அதுவும் சாதாரண நிகழ்வாகவே மாறிப்போனது.

விதிமீறல்: தீபாவளி, திருக்கார்த்திகை, புத்தாண்டு பண்டிகை தினங்களுக்காக வித, விதமான பட்டாசுகளை தயாரித்து, ஆண்டுதோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் உற்பத்தியாளர்கள். இதற்கென முறையாக பின்பற்றவேண்டிய விதிமுறைகளை ஆலை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதனை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

பட்டாசு தொழிற்சாலைகள்: தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு பட்டாசு தொழிற்சாலைகள் என சுமார் 1000 உள்ளன. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 850 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில், சிவகாசி தான் பட்டாசு தயாரிப்பின் அங்கமாக திகழ்வதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

உயிருக்கு ஆபத்து: 850 பட்டாசு ஆலைகளில் 164 பட்டாசு ஆலைகள் வருவாய் வட்டாட்சியரின் கீழும், 650 பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியின் கீழும் உள்ளன. முதலிப்பட்டி பகுதியில் மட்டும் தோராயமாக நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள்.

உலுக்கிய விபத்து: கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர், லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் சேதமடைந்தன. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சிவகாசி பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். 2012ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி முதலிப்பட்டியில் கடந்த நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 39 பேர் உடல் கருகி பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியது.

தொடரும் விபத்துகள்: அதே ஆண்டு அதே மாதத்தில் 28ம் தேதி விஜயகரிசல் குளத்தில் வீட்டிற்குள் வைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்திற்குப் பிறகுதான் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் அடுத்ததுத்து விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் கந்தக பூமியில் உயிர்கள் கருகுவது தொடர்கதையாகி வருகிறது.

ஒரே நாளில் 2 விபத்துகள்: கடந்த 2021ஆம் ஆண்டு அச்சங்குளத்தில் நிகழ்ந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டும் அடுத்தடுத்து பலரது உயிர் பறிபோனது. பட்டாசு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தாலும் பலரும் நடைபிணமாகவே வாழ்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் எம்.சுப்புலாபுரம் அருகே ரெங்காபாளையம், கிச்சநாயக்கன்பாளையத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்துகளில் பல உயிர்கள் பறிபோனது.

கருகிய உயிர்கள்: கந்தக பூமியான விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் நிகழ்ந்த 200க்கும் மேற்பட்ட விபத்துகளில் 500க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். விபத்து நடக்கும் போது பரபரப்பாக பேசப்படுவதும் அடுத்து சில நாட்களில் மறக்கப்பட்டு விடுவதுமாக இருக்கிறது. வெடி விபத்தின் போது பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதான் அதைவிட பெரும் சோகம். இந்த விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+