வெற்றியை பறிகொடுத்த சென்னை ஸ்மாஷர்ஸ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கலப்பு இரட்டையர் போட்டியில் கேப்ரியாலா ஆட்காக் காயமடைந்ததால், டெல்லி டேஷர்ஸ் அணியிடம் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றியை பறிகொடுத்தது

பிரீிமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் எட்டு அணிகள், பங்கேற்கும் இந்தப் போட்டி, நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.

chennai smashers smashed

முதல் டையில் அவதே வாரியர்ஸ் அணியிடம் 4-3 என்ற கணக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி தோல்வியடைந்தது. அடுத்த டையில், மும்பை ராக்கெட்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில், டெல்லி டேஷர்ஸ் அணியுடன் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி மோதியது. ஆடவர் இரட்டையரில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் ஒய். லீ - பி.எஸ். ரெட்டி ஜோடி 2-0 என்ற கணக்கில் வென்றது.

ஆடவர் இரட்டையரில் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் சென்னை ஸ்மாஷர்ஸ் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், மகளிர் ஒற்றையரில், பி.வி., சிந்து தோல்வியடைந்தார்.

1-2 என்ற கணக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி பின்தங்கியிருந்த நிலையில், கலப்பு இரட்டையரில் வென்றால், 3-0 என்று கணக்கில் இந்த டையை வெல்வதற்கு சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்கு வாய்ப்பு இருந்தது.

சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக கிரிஸ் ஆட்காக், கேப்ரியாலா ஆட்காக் களமிறங்கினர். முதல் செட்டில் 5-6 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், காப்ரியாலாவுக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அதையடுத்து, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால், 3-0 என்ற கணக்கில் டெல்லி டேஷர்ஸ் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது

வரும் 6ம் தேதி சென்னையில் நடக்கும் ஆட்டத்தில் ஆமதாபாத் ஸ்மேஷ் மாஸ்டர்ஸ் அணியுடன் சென்னை ஸ்மேஷ் மாஸ்டர்ஸ் அணி மோதுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+