Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷமியை டார்கெட் செய்த இந்துத்துவாவினர்.. பாகிஸ்தானிடம் தோற்றவுடன் வந்த தேசதுரோகி பட்டம் - FLASH BACK

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இந்திய வீரர் முஹம்மது ஷமி பல முறை மதரீதியாக விமர்சிக்கப்பட்டு உள்ளா. என்ன நடந்தது? பிளாஷ்பேக்கில் பார்ப்போம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 3 ரன்களிலும், ரோகித் ஷர்மா ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

Flash back on how hindutva target Muhammad Shami during 2021 t20 worldcup

அப்போது கேப்டனாக இருந்த் விராட் கோலி மட்டுமே அரைசதம் விளாசினார். ரிஷப் பண்டும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா என யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 151 ரன்கள் என்ற குறைவான இலக்கையே நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

குறைவான இலக்கை எதிர்நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும், முஹம்மது ரிஜ்வானும் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஜ்வான் 79 ரன்களும், பாபர் அசாம் 68 ரன்களும் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் இலக்கை கடந்து வெற்றிபெற்றனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் முஹம்மது ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா என யாராலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அனைவரது ஓவர்களிலும் பவுண்டரிகள் பறந்தன. முஹம்மது ஷமி அதிகபட்சமாக 43 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார்.

அந்த போட்டியில் ஷமி பந்துவீச்சில் அதிக ரன்கள் போயிருந்தாலும், இந்திய அணியின் தோல்விக்கு ஷமி மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. பேட்ஸ்மேன்களின் சொதப்பலும், மற்ற பந்துவீச்சாளர்களின் சுமாரான ஆட்டமும் காரணமாக இருந்தது. ஆனால், இந்துத்துவாவினர் முஹம்மது ஷமியை மட்டுமே குறிவைத்தார்கள். அவரது மதத்தை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன் வைத்தனர். முஹம்மது ஷமி பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தேசத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் அவதூறு பரப்பினார்கள்.

முஹம்மது ஷமியை இனி இந்திய அணியில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்றும், அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் வசவு மொழிகளை உதிர்த்தனர். ஷமிக்கு எதிரான இந்த மத வெறுப்பு பிரச்சாரத்துக்கு முதல் ஆளாக அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர் இந்திய அணியின் கிங் என்று அழைக்கப்படும் அப்போதைய கேப்டன் விராட் கோலி. "எந்த தனி நபரிடமும் நேரில் பேச முடியாத முதுகெலும்பு இல்லாத கூட்டம்.

என்னைப் பொறுத்தவரை, ஒருவருடைய மதத்தின் மீது தாக்குதல் நடத்துவது மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம். மதத்தை வைத்து ஒருவரை இழிவுபடுத்துவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை."என்று கோலி காட்டமாக தெரிவித்தார். அதை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர், சேவாக், அனில் கும்ப்ளே உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் முஹம்மது ஷமிக்கு ஆதரவாக கருத்திட்டார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் ஷமி மீதான மத ரீதியான தாக்குதல் குறித்து கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதே ஷமியை மத ரீதியில் துன்புறுத்தும் வகையில் இந்த ஆண்டு அவர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்தவர்கள் அவருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். ஆனால், அப்போது கேப்டனாக இருந்தவர் ரோகித் ஷர்மா. கோலியைபோல் அவர் ஷமிக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. இதுபோன்ற சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என்று கூறி கடந்து சென்றுவிட்டார். அன்று தன்னை தேச துரோகி என்று விமர்சித்தவர்களுக்கு வார்த்தைகளால் பதில் கொடுக்காமல் அமைதியாக இருந்த ஷமி, இன்று பந்துவீச்சால் பதிலடி கொடுத்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+