கொஞ்சமும் தயங்காத டிஎஸ்பி.. 4வது நாளிலும் தொடர்ந்து 7 ஓவர்கள்.. இங்கிலாந்தை அலறவிட்ட முகமது சிராஜ்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது இங்கிலாந்து ரசிகர்களையே ஆச்சரியம் அடைய வைத்திருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், நிதீஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மிரட்டிய சிராஜ்
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் கிராலி - பென் டக்கெட் கூட்டணி தொடங்கியது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அட்டாக்கை தொடங்கினார். பிட்சில் பவுன்ஸ் இருந்த காரணத்தால் சிராஜ் எதிரணியை ஒரு வழி செய்துவிட்டார். இதன் பலனாக சிராஜ் வீசிய 3வது ஓவரிலேயே டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
7 ஓவர்கள்
தொடர்ந்து, சிராஜ் வீசிய 6வது ஓவரில் போப் 4 ரன்களில் எம்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பும்ரா 5 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை முடித்து விலகிய நிலையில், மறுபக்கம் சிராஜ் தொடர்ச்சியாக 7 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசினார். 2வது விக்கெட்டை வீழ்த்திய பின், மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்துவதற்காக 7வது ஓவரையும் வீச வந்தது இங்கிலாந்து ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
ஓய்வு கிடையாது
ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது நாள் ஆட்டம் இன்று. ஆனாலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் கொஞ்சம் கூட தளர்வு இல்லாமல் 7 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசி இருக்கிறார். பும்ராவை போல் 2வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் ஒன்றும் ஓய்வு கூட எடுக்கவில்லை. தொடர்ச்சியாக 3வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் விளையாடி வருகிறார்.
அதிக ஓவர்கள்
இது இந்திய ரசிகர்களையும் ஆச்சரியம் கொள்ள வைத்திருக்கிறது. 2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக அதிக ஓவர்களை வீசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிராஜ் தான். சுமார் ஆயிரம் ஓவர்களுக்கு மேல் வீசி இருக்கிறார். மறுபக்கம் பும்ரா இன்னும் 900 ஓவர்களை கூட வீசவில்லை. எந்த பிட்ச், எந்த அணி என்பதையெல்லாம் பார்க்காமல் சிராஜ் தொடர்ச்சியாக அவரின் பணியை செய்து கொண்டே இருக்கிறார்.
3வது நாள் சம்பவம்
நேற்றைய ஆட்டத்தில் கூட ஜாக் கிராலியுடன் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மற்ற இந்திய வீரர்கள் அவர்களின் இடத்தில் இருக்க, எங்கேயோ இருந்த சிராஜ் விரைவாக ஓடி வந்து சுப்மன் கில்லுக்கு ஆதரவாக நின்றார். இதனால் முகமது சிராஜை ரசிகர்கள் ரியல் Work Horse என்று பாராட்டி வருகின்றனர்.
-
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications