இதெல்லாம் மிக மோசம்.. மிக மலிவான நிலைக்கு சென்ற சிஎஸ்கே ரசிகர்கள்? தோனியால் ஏற்பட்ட புது சிக்கல்
சென்னை: இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியை தோனி வழிநடத்த போவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இதை சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் எதிர்கொண்ட விதம்தான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ருத்துராஜ் காயம் காரணமாக பயிற்சி எடுக்கவில்லை. நேற்று இரவு வரை அவர் பயிற்சி எடுக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் கையில் ஏற்பட்ட காயத்தால் அவர் இன்று ஆடுவது சிரமம் ஆகி உள்ளது. இதனால் சிஎஸ்கேவிற்கு மீண்டும் தோனி கேப்டன் ஆகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் இதை வரவேற்று கொண்டாடி உள்ளனர்.

சிக்கல்: ஆனால் இதை சிஎஸ்கே ரசிகர்கள் சில எதிர்கொண்ட விதம்தான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் இப்படி கொண்டாடுவதற்கு பின் பல தவறுகள்.. மோசமான உதாரணங்கள் உள்ளன.
1. ருத்துராஜ் சிஎஸ்கே பார்ம் பேட்ஸ்மேன். இப்போது பார்மில் உள்ள டாப் பேட்ஸ்மேன் இவர் மட்டுமே. ஆனால் இவரை காயத்திற்காக சிஎஸ்கே ரசிகர்கள் வருந்தவில்லை.
2. ருத்துராஜ் போனதும் தோனி வருகிறார் என்ற சந்தோசமே பல ரசிகர்களுக்கு மேலோங்கி உள்ளது. இது தவறான மனநிலை.
3. ருத்துராஜ் போன்ற இளம் வீரருக்கு இப்படி ஆகும் போது அதை பற்றி பேசாமல் தோனி வருகையை கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் .. தவறான மனநிலை.
4. ஏற்கனவே சிஎஸ்கே வீரர்கள் அவுட் ஆகி தோனி களத்திற்கு வந்தால் அதை கொண்டாடும் விதம் காரணமாக சிஎஸ்கே வீரர்கள் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். இப்போது இந்த விமர்சனமும் சேர்ந்து உள்ளது.
5. இப்போது பெரிதாக கொண்டாடும் அளவிற்கும் தோனி அணியில் பங்களிப்புகளை செய்வது இல்லை. பெங்களூருக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில், இக்கட்டான நேரத்தில் எல்லாம் தோனி இறங்கவே இல்லை. அஸ்வினை இறக்கிவிட்டவர். அவர் போன பின்பே களத்திற்கு வந்தார். கீப்பர் ஒருவர் 9வது விக்கெட்டிற்கு இறங்குவது எல்லாம்.. இந்திய கிரிக்கெட்டில் 90 களில் நடக்கும். விக்கெட் கீப்பர் ஒருவர் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பதெல்லாம் அப்போது அபூர்வம். அதை இப்போது சிஎஸ்கேவில் கடைபிடிக்கிறார் தோனி.
6. தோனியிடம் பவர் இருக்கிறது. கடைசி கட்டத்தில் இறங்கி அவர் சிக்ஸும் அடிக்கிறார். ஆனால் இறங்க மாட்டேன் என்கிறார். அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக கடைசியில் ஷோ காட்டவே இறங்குவேன் என்று மனநிலை ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.
7. தோனியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது சிக்ஸ் அல்ல. அவர் இறங்கி மேட்சை முடிப்பது. முக்கியமாக சிஎஸ்கே அணி மோசமான சூழலில் உள்ள போது இறங்கி முக்கியமான நேரத்தில் ஆட்டத்தை முடிப்பது. ஆனால் இக்கட்டான நேரத்தில் இறங்கிய தோனி முதல் பால் டொக் வைக்கிறார். முன்பெல்லாம் மோசமான நேரத்தில் இறங்கி மேட்சை மெதுவாக கொண்டு சென்று அப்பறம் வேகம் எடுப்பார். ஆனால் இப்போதெல்லாம் மேட்சை முடிக்கும் எண்ணம் தோனியிடம் இல்லை. சிக்ஸ் அடித்து ஷோ காட்டினால் போதும் என்று ஆடுகிறார்.
8. கடைசி ஓவரில் சில பந்துகள் வரை சிக்ஸ், பவுண்டரி அடிக்க கூட பயப்படுகிறார். முன்பெல்லாம் பழைய ஐபிஎல் காலத்தில்.. மேட்ச் முடிந்த பின் யார் நீண்ட தூரம் சிக்ஸ் அடிக்கிறார்கள் என்ற போட்டி நடத்தப்படும். பந்தை டாஸ் செய்து சிக்ஸ் யார் தூரமாக அடிக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். அப்படித்தான் இப்போது மேட்சை பற்றி யோசிக்காமல் தோனி ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் கூட ருத்துராஜ் போனதும் தோனி வருகிறார் என்ற சந்தோசமே பல ரசிகர்களுக்கு மேலோங்கி உள்ளது. இது தவறான மனநிலை.












Click it and Unblock the Notifications