IPL 2025: ஒவ்வொரு ஆர்சிபி ரசிகனின் ஆசை.. எப்படியாவது அடுத்த 2 போட்டியில் இது நடக்கணும்!
லக்னோ: ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், இனி வரும் போட்டிகளில் சம்பிரதாய போட்டிகள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சம்பிரதாய போட்டிகளில் தான் முக்கியமான முடிவுகள் கிடைக்கும்.
பிளே ஆஃப் வாய்ப்பு
ஏனென்றால் பிளே ஆஃப் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும். ஒருவேளை குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு, இன்னொரு வாய்ப்பும் அளிக்கப்படும். ஆனால் 3 மற்றும் 4 ஆகிய இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஒரே வாய்ப்பு தான்.

ஆர்சிபியின் சிக்கல்
அந்த வாய்ப்பில் தோல்வியடைந்தால், உடனடியாக வெளியேற வேண்டிய நிலை உருவாகும். ஆர்சிபி அணிக்கு இதில்தான் முக்கிய பிரச்சனை. ஏனென்றால் 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், 2 முறை மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறது. அதாவது 8 முறை பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியிலேயே தோல்வியடைந்து வெளியேறி இருக்கிறது.
ஆர்சிபி நிலைமை
தற்போது ஆர்சிபி அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, மழையால் ஒரு ஆட்டம் ரத்து என்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியும் 12 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி, மழையால் ஒரு ஆட்டம் ரத்து என்று 17 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதனால் ஒரு அணிகளும் அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட குறைந்தபட்சம் முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
அதிலும் ஆர்சிபி அணி குவாலிஃபையர் போட்டியில் உச்சக்கட்ட சொதப்பல்களை செய்யக் கூடியது. அதுமட்டுமல்லாமல் ஜேக்கப் பெத்தேல், ஹேசல்வுட் உள்ளிட்டோர் இல்லாததால், அவர்களின் இடத்தை ஆர்சிபி அணி எப்படி நிரப்பும் என்பதே ரசிகர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. குறைந்தபட்சம் 2 போட்டிகளில் 1ல் வென்றால் கூட குவாலிஃபையர் முதல் போட்டிக்கு முன்னேற முடியும்.
ரசிகர்கள் ஆசை
ஆனால் ஆர்சிபி அணி அடுத்த 2 போட்டிகளில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளுமே பேட்டிங்கில் பலமான அணிகள் என்பதால், ஆர்சிபி அணியால் ஈடு கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு ஆர்சிபி ரசிகனின் வேண்டுதலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications