விடாமல் சிஎஸ்கேவை துரத்திய பஞ்சாப்.. விட்டுத்தராத பிளமிங்.. கான்வேயை அணியில் எடுத்தது எப்படி?
சென்னை: சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வேயை எடுக்க தொடக்கத்திலேயே கை தூக்கியது. 2 கோடி ரூபாய்க்கு தொடக்கத்திலேயே அவரை எடுக்க முயன்றது. எப்போதும் எந்த வீரரை எடுத்தாலும் சிஎஸ்கே அணிக்கு போட்டியாக பஞ்சாப் வரும். அதேபோல் இன்றும் பஞ்சாப் போட்டியிட்டது.
இவரை எடுக்க சிஎஸ்கேவை விடக்கூடாது என்று பஞ்சாப் வேலையை காட்டியது. கடந்த முறையும் ஏலங்களில் இப்படி பஞ்சாப் செய்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே மாறி மாறி நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வேயை எடுக்க பஞ்சாப் - சிஎஸ்கே இடையே மாறி மாறி போட்டி நடந்தது. இதையடுத்து 3 கோடி ரூபாய்க்கு பின் விட்டு பிடிக்கலாம் என்று சிஎஸ்கே கொஞ்சம் ஆர்வம் இல்லாதது போல இருந்தது. கடைசியில் மாறி மாறி போட்டி செல்ல.. ஒருவழியாக சிஎஸ்கே அணி 6.25 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வேயை அணியில் மீண்டும் எடுத்தது. இதுதான் சிஎஸ்கேவின் முதல் பை ஆவார்.

ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்
ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
ஏலம் எடுக்கப்பட்ட விவரம்: இன்று முதல் ஆளாக வந்த அர்ஷ்தீப் சிங்கை சிஎஸ்கே அணி கேட்டது கவனம் பெற்றுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் கேட்டது. இதில் டெல்லி அணி இணைய.. ஏலம் 7.5 கோடி ரூபாய் வரை சென்றது. 7.5 கோடி ரூபாய்க்கு சென்னை போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து குஜராத் அணி போட்டியில் இணைந்தது. பின்னர் 10 கோடி தாண்டி ஏலம் சென்ற நிலையில் 15 கோடி ரூபாய் தாண்டிய நிலையில் ஹைதராபாத் - ராஜஸ்தான் இடையே கடுமையான போட்டி நிலவியது.
15.75 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து 18 கோடி ரூபாய்க்கு அவரின் ஏலத்தை இதையடுத்து ஹைதராபாத் உயர்த்தியது. அதை பஞ்சாப் அணி ஏற்றுக்கொண்ட நிலையில்.. அவர் பஞ்சாப் அணிக்கு ஏலம் விடப்பட்டார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான ககிசோ ரபாடாவை குஜராத் அணி எளிதாக எடுத்துள்ளது. இவரை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது.
மும்பை அணி எப்போதும் பவுலர்களை அதிக விலைக்கு எடுக்கும். அந்த வகையில் இவரை எடுக்கவும் தீவிரமாக முயன்றது. அதன்படியே 9.5 கோடி ரூபாய் வரை இவரை எடுக்க மும்பை அணி முயன்றது. ஆனால் குஜராத் அணி விடாமல் துரத்தியது. 10.5 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி இவரை எடுக்க முயன்றது. அப்போது பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த விரும்புகிறதா என்று கேட்கப்பட்டது. பஞ்சாப் அணி இதை விரும்பவில்லை என்றதும்.. குஜராத் அணி 10.5 கோடி ரூபாய்க்கு அவரை தூக்கியது.












Click it and Unblock the Notifications