அடுத்த ஆல்ரவுண்டர் டிக்! குறுக்கே புகுந்த பஞ்சாப்! நேக்காக சாம் கரணை தூக்கிய சிஎஸ்கே! எப்படி நடந்தது
சென்னை: சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. இந்த சீசன் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு ஃபாரீன் ஆல் ரவுண்டர் தேவை இருந்தது. அதை மனதில் வைத்தே இன்று ஏலத்தில் கவனமாக இருந்தது. இதன் காரணமாகவே இன்று டு பிளசிஸ் வந்த போது சிஎஸ்கே கேட்கவில்லை. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் வந்த போதும் சிஎஸ்கே கேட்கவில்லை.

அதோடு நிற்காமல்.. ஷரத்துல் தாக்கூர் வந்த போது கூட சிஎஸ்கே அவரை எடுக்க விரும்பவில்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டு ஆல் ரவுண்டர்களுக்கு மட்டுமே சிஎஸ்கே ரெடியாக இருந்தது.
அதன்படியே சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. சாம் கரணை எந்த அணியின் எடுக்க விரும்பவில்லை. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. பஞ்சாப் அணியில் ஆடினார்.. இந்த சீசன் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.
பஞ்சாப் அணி அவரை ஆர் டிஎம் மூலம் எடுக்க முயன்றது. ஆனால் கடைசியில் ஆர்டிஎம் வேண்டாம் என்ற முடிவை எடுத்து.
நேற்று ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. கேப்டன் தோனியால் மிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அஷ்வின் மீண்டும் தனது சொந்த மண்ணான சென்னைக்கு திரும்பி உள்ளார். பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு சென்று தற்போது கடும் போட்டிக்கு பிறகு அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி கைப்பற்றி உள்ளது.
நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:
மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி\
சிஎஸ்கே அணி நேற்று நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் சில சர்ப்ரைஸ் முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார்.
நேற்று எடுக்கப்பட்ட வீரர்கள்:
நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்
விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1 ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
2 மதீஷா பத்திரனா (13 கோடி)
3 சிவம் துபே (12 கோடி)
4 ரவீந்திர ஜடேஜா (18 கோடி)
5 எம்எஸ் தோனி (4 கோடி)
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications