ஆர்சிபி அணியின் உரிமையாளராகும் அனுஷ்கா சர்மா? மிகப்பெரிய முதலீட்டை செய்யும் விராட் கோலி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆர்சிபி அணியை விற்பனை செய்ய டியாகோ நிறுவனம் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா சில பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஆர்சிபி அணியின் 3 சதவிகித பங்குகளை ரூ.400 கோடிக்கு வாங்க அனுஷ்கா சர்மா முன் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றால், பெங்களூர் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. இதனால் ஆர்சிபி அணியின் மதிப்பு உச்சத்திற்கு சென்றது. இதனால் ஆர்சிபி அணியை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்தது.

RCB

ஆர்ச்பி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் மதிப்பாக சுமார் 2 பில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணியை வாங்குவதற்கு அடார் பூனவாலா, கவுதம் அதானி உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பங்குகளை வாங்குவதற்கு சில பாலிவுட் பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆர்சிபி அணியின் 3 சதவிகித பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார். இதற்காக ரூ.400 கோடி வரை முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக அனுஷ்கா சர்மா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் 2 சதவிகித பங்குகளை ரூ.300 கோடி முதலீடு செய்து வாங்க விரும்புவதாக கூறப்படுகிறது.

2007ல் ஐபிஎல் விதிகள் உருவாக்கப்பட்ட போதே அந்தந்த அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் அந்த அணியின் பங்குகளை வாங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. விராட் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் சூழலில், குடும்ப உறுப்பினரை ஆர்சிபி அணியின் பங்குகளை வாங்க ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை ஆர்சிபி அணியின் மீது அனுஷ்கா சர்மா முதலீடு செய்தால், அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக் கான் மற்றும் ஜூகி சாவ்லா கேகேஆர் அணியையும், பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் கிங்ஸ் அணியையும் வாங்கியுள்ளனர். நடிகை ஷில்பா ஷெட்டியும் கூட ராஜஸ்தான் அணியின் பங்குகளை சில ஆண்டுகளுக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+