வம்பை விலைக்கு வாங்கிய சஞ்சு சாம்சன்.. அரையிறுதியில் விளையாட தடையா? போச்சு பெரிய சிக்கல்
சென்னை: சஞ்சு சாம்சன் அரையிறுதிப் போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் ஹெல்மெட்டை தூக்கி வீசியது இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் சஞ்சு சாம்சன். விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடியான பேட்டிங் திறனை கொண்ட சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பெரும் போராட்டத்திற்கு பிறகு அணியில் இடம் பிடித்தார்.

அரையிறுதிக்கு சென்ற இந்திய அணி
சூப்பர் 8 சுற்று பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று இருந்த நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
சஞ்சு சாம்சனுக்கு தடை?
இந்த வெற்றியால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. மும்பை வான்கடேவில் நாளை மறுநாள் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்றால் தான் இறுதி ஆட்டத்திற்கு செல்ல முடியும்.
இதனால் இந்த ஆட்டம் முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், இதில் சஞ்சு சாம்சன் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு நடந்து கொண்ட விதமே காரணம் ஆகியுள்ளது.
ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற சந்தோஷத்தில் சஞ்சு சம்சன் தனது ஹெல்மெட்டை தரையில் வீசி விட்டு முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார். ஐசிசி விதிகளின் படி கிரிக்கெட் வீரர்கள் உபகரனங்களை தூக்கி வீசக்கூடாது. இதனால், விதிகளுக்கு எதிராக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு எதிராக தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சஞ்சு சம்சானுக்கு அரையிறுதி ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அதிகரித்துள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐசிசி விதிகளின் படி வீரர்கள் களத்தில் உரிய நடத்தையை வெளிப்படுத்த வேண்டும்.
என்ன முடிவு எடுக்கப்படும்?
ஐசிசி விதிகள் 2.2 படி, கிரிக்கெட் உபகரணங்களை தூக்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வீரர்களுக்கு தண்டனை விதிக்க முடியும். ஹெல்மெட், பேட், ஸ்டம்ப்ஸ் என உள்ளிட்டவை இதில் அடங்கும். எனவே, சஞ்சு சம்சன் செயலுக்கு ஐசிசி தண்டனை விதிக்க முடியும் என்றே சொல்லப்படுகிறது. எனினும், இந்த விவகாரத்தில் ஐசிசி ஏதேனும் முடிவு எடுத்து உள்ளதா என்பது பற்றி தெரியவில்லை.
விளம்பர பலகைகள், மைதான பவுண்டரிகள், டிரஸ்ஸிங் ரூம் கதவுகள், கண்ணாடிகள், ஜன்னல்கள் மற்றும் பிற பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றை வேண்டும் என்றே (அதாவது நோக்கத்துடன்), கவனக்குறைவாக அல்லது அலட்சியமாக (தற்செயலாக இருந்தாலும் கூட) சேதம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஐசிசி ஒழுக்கக் கோட்பாட்டை மீறுவதாக கருதப்படுகிறது.
4 டிமெரிட் புள்ளிகள்
அண்மையில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் முன்சேவுக்கு 1 டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அவுட்டான பின்னர் ஹெல்மெட்டை எறிந்ததற்காக ஸ்காட்லாந்து வீரரான அவர் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
பெரும்பாலும் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட வேண்டும் என்றால் 24 மாதங்களுக்குள் 4 டிமெரிட் புள்ளிகள் விதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications