மீண்டும் பிரேக் அப்.. சச்சின் மகள் சாரா டெண்டுல்கரை பிரிந்த பாலிவுட் நடிகர்.. என்ன நடந்தது?
மீண்டும் பிரேக் அப்.. சச்சின் மகள் சாரா டெண்டுல்கரை பிரிந்த பாலிவுட் நடிகர்.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அண்மையில் இருவரின் குடும்பத்தினரும் நேரில் சந்தித்த நிலையில், திடீரென பிரேக் அப் செய்திருப்பது பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். சச்சினின் மகள் என்பதால் சாரா டெண்டுல்கருக்கு பாலிவுட் நடிகைகளுக்கும் நிகரான முக்கியத்துவம் சோசியல் மீடியாவில் இருந்து வருகிறது. லண்டனில் மருத்துவம் படித்த சாரா டெண்டுல்கர், படிப்பின் போதே மாடலிங் துறையிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

சுப்மன் கில் - சாரா
இதனால் இன்ஸ்டாகிராம் மூலமாக பல்வேறு நிறுவனங்களின் பொருட்களுக்கு விளம்பர தூதராக இருந்தார். இதனிடையே இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இடையில் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் வெளியில் சென்ற புகைப்படங்கள், ஜியோ கண்காட்சியில் இணைந்து பங்கேற்றதன் மூலமாக, இருவரும் உறவில் இருப்பது தெரிய வந்தது.
சுப்மன் கில் அதிர்ச்சி
சுப்மன் கில்லுக்காக அவர் விளையாடும் போட்டிகளை நேரில் சென்று சாரா டெண்டுல்கர் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையின் போது கூட சுப்மன் கில்லை பார்க்க சாரா டெண்டுல்கர் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக சுப்மன் கில் அளித்த பேட்டியில், 3 ஆண்டுகளாக சிங்கிளாக இருப்பதாக தெரிவித்து அதிர்ச்சியை கொடுத்தார்.
சாரா டெண்டுல்கரின் புது காதல்
இதன் மூலமாக சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இடையில் பிரேக் அப் நடந்தது உறுதியாகியது. இதன்பின் சாரா டெண்டுல்கர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் நட்புடன் பழகி வந்தது தெரிய வந்துள்ளது. நட்பு சில வாரங்களுக்கு முன்பாக காதலாக மாறிய நிலையில், இரு குடும்பத்தினரும் நேரில் சந்தித்துள்ளனர்.
மீண்டும் பிரேக் அப்
இந்த நிலையில் சாரா - சித்தாந்த் சதுர்வேதி இடையில் பிரேக் அப் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கையில், சித்தாந்த் சதுர்வேதி தான் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்று உறவில் இருந்து விலகி கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மேலும், சித்தாந்த் சதுர்வேதி - அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நந்தா இடையில் பிரேக் அப் ஆனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications