+1 பார்முலா.. தமிழர்களை வைத்து கேம் ஆடும் ரோஹித் சர்மா! உலகக் கோப்பை டீமில் மாற்றம்? நெருங்கும் கெடு
சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை இந்தியா ஏற்கனவே வென்றுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெல்லவில்லை என்றாலும் கவலை இல்லை. இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று களமிறங்கி உள்ள இந்திய அணி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் இறங்கி உள்ளது. 5 ஓவர் முடிவில் 44 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இன்று ஆடும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு உள்ளார். கடந்த போட்டியில் அஸ்வின் சிறப்பாக ஆடிய நிலையில் இந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அஸ்வின் கடந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தார். இருந்தாலும் அவருக்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தர் இன்று அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
ஆல் ரவுண்டர்: அதன்படி உலகக் கோப்பை இந்திய அணியில் கூடுதல் ஆல் ரவுண்டர்களை இணைக்கும் முடிவில் ரோஹித் சர்மா இருக்கிறாராம். அதாவது அணியில் 2 ஆல் ரவுண்டருடன் இந்திய அணி களமிறங்குகிறது. இதை + 1 போட்டு மூன்று பேருடன் இறங்கும் திட்டத்தில் இந்தியா இருக்கலாம் என்கிறார்கள்.
அதாவது சென்னை, கொல்கத்தா போன்ற சில மைதானங்களில் மட்டும் கூடுதல் ஸ்பின் பவுலர்கள், அதில் கூடுதலாக அல் ரவுண்டர் என்ற பார்முலாவுடன் இறங்கலாம் என்ற திட்டத்தில் ரோஹித் சர்மா இருப்பதாக கூறப்படுகிறது.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தற்போது அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை அணியில் உள்ள 15 பேர்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் ஆவர்.
பொதுவாக, பெரும்பாலும் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்/ இஷான் கிஷான், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
இதில் ஒருவேளை வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் 15 பேர் அணியில் சேர்க்கப்பட்டு சூர்யா குமார் யாதவ் மற்றும் கூடுதலாக ஒருவர் (ஷரத்துல்) நீக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னை, கொல்கத்தா போன்ற பிட்சுகளில் கூடுதல் ஸ்பின் ஆல் ரவுண்டர் சேர்க்கப்படலாம்.
அதன்படி ஆடும் 11 பேர் கொண்ட அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்/ இஷான் கிஷான், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்/ ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்/ வாஷிங்க்டன் சுந்தர்/ அஸ்வின், முகமது சிராஜ்/ ஷமி ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
அதாவது ஒரு பாஸ்ட் பவுலர் குறைக்கப்பட்டு அக்சர் பட்டேல் சேர்க்கப்படலாம். அதேபோல் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு கூடுதலாக ஒரு ஸ்பின் ஆல் ரவுண்டர் சேர்க்கப்படலாம். அதாவது குல்தீப் நீக்கப்பட்டு அஸ்வின் அல்லது சுந்தர் சேர்க்கப்படலாம். இதன் மூலம் ஜடேஜா, பாண்டியா, அஸ்வின், அக்சர் என்று 4 ஆல் ரவுண்டர் அணியில் இருக்க முடியும். பும்ரா, சிராஜ் என்று இரண்டு பாஸ்ட் பவுலர்கள் இருக்க முடியும்.
ஐசிசி விதிப்படி உலகக் கோப்பை 15 பேர் அணியில் புதிய வீரரை சேர்க்க நாளை வரை கெடு உள்ளது. இதன் காரணமாகவே அஸ்வின்,. வாஷிங்டன் சுந்தரை வைத்து ரோஹித் சர்மா தற்போது சோதனைகளை செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications